பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு59

மதுரைக்குப் போய் அங்கு வாணிகஞ் செய்து பெரும் பொருளைச் சேர்த்தான். பாண்டிய அரசன் அவனுக்கு எட்டிப்பட்டமும் எட்டிப் பூவும் அளித்துச் சிறப்புச் செய்தான் என்று மணிமேகலையே கூறுகிறது. தருமதத்தன் -

‘வாணிக மரபின் வருபொருள் ஈட்டி
நீள்நிதிச் செல்வனாய் நீணில வேந்தனில்
எட்டிப் பூப் பெற்று இருமுப்பதிற் றியாண்டு
ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினான்’

(மணி, 22: 111-114)

அடிக்குறிப்புகள்

1. No 80 p. 20 Notes on the Amaravati Stupa. by J. Bargess. (18/2 Archaeology Survey of South India.)

2. Tamil House - holders’ Terrace Anuradhapura by S. Paranavatana. P.P. 13-14, Annual Bibliography of India Archaeology. Vol. xiii. 1938. Journal of Ceylon branch of the Royal Asiatic Society Colomba Vol. XXXV 1942. P.P. 54-56. Inscriptions of Ceylon Vol. I (1970) P. 7. No. 94 (a).

3. P. 28. Nos (19) 357 (20) P. 37. No 430. Inscription of Ceylon Vol. I (1970) Edited s. Paranavalana.