94 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4 |

மங்களூர் சங்க காலத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்தது துளு நாடு. துளுநாட்டை நன்னன் என்னும் பெயருள்ள அரசர் பரம் பரை ஆண்டு வந்தது. துளு நாட்டின் முக்கியத் துறைமுகமாக இருந்தது மங்களூர். நேத்திராவதி ஆறு கடலில் கலக்கிற இடத்தில் மங்களூர் இருந்தது. இப்போதும் மங்களூர் சிறு துறைமுகப் பட்டினமாக இருக்கிறது. மங்களூரில் இருந்த மங்கலாதேவி கோயில் பேர் போனது. சிலப்பதிகாரம் மங்கலா தேவி கோயிலைக் கூறுகின்றது. மங்களூர் துறைமுகத்தில் யவன வாணிகர் வந்து வாணிகம் செய்தார்கள். தாலமி என்னும் யவனர் இந்தத் துறைமுகப் பட்டினத்தை மகனூர் என்று கூறியுள்ளார். மங்களூரைத்தான் இவர் இப்படிக் கூறி |