| 110 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 5 |
தானங் கொடுக்கப்பட்டது என்று தோன்றுகிறது. அரிதன் அத்துவாயி, அரிட்ட கோயிபன் என்பவை தானங் கொடுத்தவர்களின் பெயர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து குகையையும் (உறையுளையும்) ஏரியையும் தானம் செய்தார்கள். கடைசியில் தானம் என்னும் சொல் இவ் வாக்கியத்தில் விடுபட்டுள்ளது. ஆகவே இந்த வாக்கியம் பயனிலை இல்லாமல் முடிகிறது. வினைச்சொல்லைச் சேர்த்து இந்த வாக்கியத்தை ‘இவ் குன்றத்து உறையுள் உதன் ஏரி அரிதன் அத்துவாயி அரிட்ட போயிபன் தானம்’ என்று முடிக்கலாம். அடிக்குறிப்புகள் 1. Proceedings and Transaction of the First All India Oriental Conference, Poona 1919. 2. Proceedings and Transaction of the Third All India Oriental Conference, Madras 1924. 3. Proceedings and Transaction of the Tenth All India Oriental Conference, Tirupati 1940; pp 362-367 New Indian Antiquary Vol. I. 4. P. 65 No. Seminar on Inscriptions 1966. 5. PP. 276-278. Early South Indian Palaeography. |