பக்கம் எண் :

116மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 5

கூறுகிறார்.2 திரு. எச். கிருட்டிண சாத்திரி இவற்றை இவ்வாறு படித்துள்ளார்: இவற்றை

1. போ தி னா (ஊ) ர தா (னா)

2. கு வி ரா அ (ந) தை வெ ய அ தா னா

3. கு வி ரா அ ந தை வெ (ய) அ தா னா

4. தி தோ ஈ ல அ தா னா

5. அ ந தை அ ரி ய

6. தி அ ந தை (ஈர) வா த ன

7. ம தி ர (ஆ) அ ந தை (வி) ஜு வா னா

8. சா ந தா ந தை சா ந தா னா

9. அ ந தை வ (எ) ந தா அ தர் னா

இவ்வாறு படித்த இவர் இதில் ‘அதானா’ என்னுஞ் சொல் ஆறு இடங்களிலும் ‘அநதை’ என்னுஞ் சொல் ஏழு இடங்களிலும் வந்துள்ளன என்று கூறுகிறார்.

திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர் இந்த எழுத்துக்களை இவ்வாறு படித்துள்ளார் :

1. பொதின் ஊர-அ தான. (பொதினூரைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த தானம்)

2. குவீர அந்தை வேய தான (குவீரருடைய படுக்கை. வேய் கொடுத்த தானம்)

3. திடயில்-அ-தான (திட்டையூரில் இருந்தவர் கொடுத்த தானம்)

4. அந்தை அரை தி (அரை தி என்பவரின் படுக்கை)

5. அந்தை இரவாதான் (இரவாதானின் படுக்கை)

6. மதிர அந்தை (மதிரைக்கு உரிய படுக்கை)

7. விசுவ சானதா அந்தை (விசுவன் சானதானின் படுக்கை)

8. சானதான் அந்தை (சானதானின் படுக்கை)

9. வேன தா-அ-தான (வேனதானின் தானம்)