பக்கம் எண் :

122மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 5

திரு. கே.வி.சுப்பிரமணிய அய்யர் படித்து விளக்கம் கூறுவன இவை: ‘உபா-சா-அ போத ணெட்டுல வோச்சோ கொடு பளிஈ உபாசா என்பது உபாசகன் என்னும் பிராகிருத மொழிச் சொல்லின் திரிபு. போத என்பது புத்திரன் என்னும் பொருள் உள்ள சொல்.

ணெட்டுல வோச்சோ என்பது ஓர் ஆளினுடைய பெயர். கடைசியில் உள்ள ஈ என்பது இது என்னும் பொருள் உள்ள சொல். ‘உபாசகன் மகன் நெடுலவோச்சன் அமைத்த குகை’ என்பது இவ் வாக்கியத்தின் பொருள்.2

திரு. சி. நாராயண ராவ் இந்த எழுத்துக்களைப் பிராகிருத மொழிபோலப் படித்துப் பிறகு அதைச் சமற்கிருதமாக்கிப் பொருள் கூறுகிறார்:

‘உபாசா’ அ போதா நாட்டலா ஒச்சோ கொடு பாலி’ஈ‘(பிராகிருதம்)

உபாத்யாய-புத்ரஹ் நாட்ய கர் ஒ பாத்யாயாற் குட்டபிதா பாவிசா (கி.ஒ) (சமற்கிருதம்)

உபாத்தியாயரின் மகனான நாட்டியம் கற்பிக்கிற நட்டுவன் வெட்டி உண்டாக்கிய ஆசிரமம் என்பது இதன் பொருள்.3

திரு. டி.வி. மகாலிங்கம் இதைப் படித்துப் பொருள் கூறுவன இவை:

‘உபாசா அபொதெ ணெடுள வோசோ கொடு பளிஈ’ உபாசன் என்பது உபாஸகன் என்னும் சொல்லின் திரிபு. உவச்சன் என்பதுடன் தொடர்பு படுத்தலாம். அபொதெ ணெடுள வோசோ என்னும் சொற்கள் ஓர் ஆளினுடைய பெயர். இதில் ‘அபொதெ’ என்பது அபுரத்திரன். அபுத்திரன் என்னும் பெயர் ஆபுத்திரன் என்று மணிமேகலை காவியத்தில் கூறப்படுகிறது. நெடுள என்பதில் முதல் எழுத்து ணகரத்தில் தொடங்குகிறது. இது தமிழ் இலக்கணப்படி தவறு. ஆனால், பிராகிருத மொழிப்படி சரியானது. நெடுள என்பது நெடுவேள் (முருகன்) நெடியோன் (விஷ்ணு) என்னும் பொருள் உள்ளது. உபாசகன் ஆபுத்திர நெடுவேளின் வத்ஸன் (மகன்) இந்தத் தானத்தைச் செய்தான் என்பது இதன் கருத்து.4

திரு. ஐ. மகாதேவன் இதுபற்றி இவ்வாறு கூறுகிறார்:

‘ஊ பா ச - அன் தொண்டி - ளவன் கொடி பாளிஈ’