பக்கம் எண் :

48மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 5

ஆடாப் படிவத்து ஆன்றோர் போல
வரைசெறி சிறுநெறி நிரையுடன் செல்லும்
கானயானை கவினழி குன்றம்.” (அக நா. 132:1- 4)

(மலைகள் நெருங்கிய இடுக்கான காட்டுவழியில், உணவு கொள்ளாமல் பட்டினியிருப்பதனால் வாடிய தோற்றத்தையும் நீராடாத விதத்தையும் உடைய சமண முனிவர் செய்வதுபோல, மலையிடுக்கு வழியில் யானைகள் ஒன்றன்பின் ஒன்றாகச் சென்றன என்பது இதன் பொருள்.)ஆகவே, இவற்றைப் புதிதாக ஆராய்ந்து முடிவு காணவேண்டியிருக்கிறது. அவற்றைக் காண்போம்.