பண்டைத் தமிழகம் ஆவணம் - பிராமி எழுத்துகள் - நடுகற்கள் | 69 |
வாணிகன் இக் குகையில் கற்படுக்கை அமைப்பதற்காகப் பொன் கொடுத்தான். அப் பொன்னின் மதிப்பு இதன் கடைசியில் உள்ள குறியினால் குறிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த தொடர்மொழியை பார்ப்போம். அடுத்த கல்வெட்டெழுத்தைப் பார்ப்போம். 
திரு. கிருட்டிண சாத்திரி இவ்வாறு படித்துள்ளார்.8 ‘ய கா னா கோ ண தி கா னா’ திரு. நாராயணராவ் வழக்கம் போலப் பிராகிருதமாக்கிச் சமற்கிருதம் ஆக்குகிறார்.9 ‘ய கானா கொணதி கானா’ (பிராகிருதம்) ‘யக்ஷாணாம் கொணர் தி கானாம்’ (சமற்கிருதம்) (கொணரத குன்றுகளிலிருந்து வந்தவரும் கொணரத குழுவைச் சேர்ந்தவரும்) எருது வாணிகம் செய்தவருமான வணிகருடைய (யக்ஷருடைய) தானம் என்று பொருள் கூறுகிறார். திரு.டி.வி. மகாலிங்கம் கூறுவது இது.10 ‘வியகன் கணதிகன்’ என்பது இதன் மொழிகள். வியகன் என்பது ஒருவருடைய பெயர். கனத்தி என்பது ஒருவகை மரத்தின் பெயர். மர வாணிகம் செய்கிற வியக்கன் என்பது பொருள். திரு. ஐராவதம் மகாதேவன் முன்பு கூறப்பட்ட சொற்றொடரை இந்தச் சொற்றொடருடன் இணைத்து ஒன்றாகப் படிக்கிறார்.11 ‘மா தவிரை கெ ஊபு வாணிகன் வியகன் கணதிகன்’ என்று படித்து, ‘ பெரிய தவிரைக்கு (ஸ்தவிரைக்கு) உப்பு வாணிகனான வியகன கணதிகன் கொடுத்த தானம்’ என்று பொருள் கூறியுள்ளார். இவர், மத்திரை என்பதை மா தவிரை என்று படித்துள்ளார். இவர் இரண்டு தனித்தனி சொற்றோடரை ஒன்றாகச் சேர்த்துப் படிப்பது தவறு. இரண்டும் தனித்தனியே வெவ்வேறு தொடர்கள். கிருட்டிணசாத்திரியும் டி.வி.மகாலிங்கமும், ஐ.மகாதேவனும் ஒரு தவறு செய்துள்ளனர். முன் தொடரில் உள்ள ‘மதிரை கெ ஊபு வாணிகன்’ என்பதன் இறுதியிலும் அடுத்துள்ள இடகன் கணதிகன் |