பக்கம் எண் :

76மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 5

இதிலிருந்து இக் கல்வெட்டுக்களை முழுவதும் படி எடுக்க வில்லை என்பதும், ஐராவதம் மகாதேவன் ஏறக்குறைய முழுவதும் படி எடுத்துள்ளார் என்பதும் தெரிகின்றன. முதலில் கொடுக்கப்பட்ட தொடரில் ‘அணிய் கொடுபித்தவள் அணகன்’ என்று முடிகிறது. ஐ. மகாதேவன் கொடுக்கும் தொடர் “தார அணிய் கொடுபித அவன் கஸபன் அத்விரஅ வரு(ஊ?)ம் குடு பிதோ” என்று இருக்கிறது. முதலில் காட்டப்பட்டதில் ‘அணகன்’ என்னுஞ் சொல், இரண்டாவது தொடரில் இல்லை. இரண்டாவதில் உள்ள கஸபன் என்னும் பெயர் முதல் தொடரில் இல்லை.

அழகர்மலைக் குகையில் கற்படுக்கைகளை அமைக்கப் பலர் பொருளுதவி செய்துள்ளனர். இன்னின்னார் இவ்வளவு இவ்வளவு பொருள் உதவினார்கள் என்பதும் அவர்களின் பெயர்கள் இன்னின்ன என்பதும் இந்தக் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளன. அழகர் மலையில் உள்ள இன்னொரு பிராமிக் கல்வெட்டின் வரிவடிவத்தினை 34 திரு. ஐ. மகாதேவன் இவ்வாறு படிக்கிறார்.

‘வேண் பளி ஈ அறுவை வணிகன் என அ அடன்’ என்று படித்து வேண் பள்ளி துணி வாணிகன் என(வ) ஆதன் என்று பொருள் கூறுகிறார். இதை நாம் படிப்போம். இதை வேண்பனி அல்லது வெண்பனி என்றும் படிக்கலாம். பள்ளி என்பது பளி என்று எழுதப்பட்டுள்ளது. ஈகார எழுத்து இகர ஈற்றில் முடிகிற பள்ளி (பளி)யுடன் இணைத்து