96 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 5 |
குகையின் வாயிலுக்கு மேற்பாறையில் ஒரே வரியாக இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதன் வரிவடிவம் இது: (கீழே காண்க.) இக்காலத்து எழுத்தில் இதை இவ்வாறு எழுதலாம். க ணி ய் நந் தா ஸி ரி ய கு அன தமம ஈதா நெ டி ஞ ச ழி யா ன ஸ ல க ன இ ள ஞ சா டி க ன த ந தை ய் ச டி கா ன செயிய பாளிய் புள்ளி இடவேண்டிய எழுத்துக்குப் புள்ளியிட்டால் இதன் வாசகம் இவ்வாறு அமைகிறது: 
க ணி ய் நந் தா ஸி ரி ய கு அன தமம் ஈதா நெடி ஞ் சழியான் ஸலகன் இளஞ் சாடிகன் தந்தைய் சடிகான் செயிய பானிய் இதில், நந்தாஸிரியகு என்பதில் உள்ள ஸகரமும் தமம் என்பதிலுள்ள தகரமும் ஸலகம் என்பதில் உள்ள ஸகரமும் பிராகிருத வடமொழி எழுத்துக்கள். இந்தக் கல்வெட்டை அறிஞர்கள் சிலர் படிக்க முயன்று தங்களுக்குத் தோன்றியபடி படித்துப் பொருள் கூறியுள்ளனர். அவர் |