பக்கம் எண் :

150மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 9

சென்று அதிலிருந்து இரண்டாம் நிலையையடைந்து, அதிலிருந்து மூன்றாம் நிலைக்குச் சென்று, அதிலிருந்து நான்காம் நிலையை யடைந்து பிறகு பரிநிர்வாண மோட்சத்தை யடைந்தார்.

பகவன் புத்தர் பரி நிர்வாணம் அடைந்தபோது வானமும் பூமியும் அதிர்ந்தன. சகம்பதி பிரமனும், சக்கரனும் (இந்திரனும்) ஆனந்த மகாதேரரும், அனுருத்த மகாதேரரும் புத்தருக்கு வணக்கம் பாடினார்கள். தோன்றின பொருள்கள் அழியும் என்னும் உண்மையை யறிந்த அறிஞரான பிக்குகள் பகவன் புத்தருடைய பிரிவினால் உண்டான துக்கத்தை அடக்கிப் பொறுத்துக் கொண்டார்கள். திடமனம் இல்லாதவர்கள் அழுது புலம்பினார்கள்.

தீப்படுத்தியது

விடியற்காலையில் அனுருத்த மகாதேரர், ஆனந்த மகாதேரரை மள்ளர் இடத்திற்கு அனுப்பி பகவன் புத்தர் பரி நிர்வாண மோட்சம் அடைந்த செய்தியைத் தெரிவித்தார். மள்ளர்கள் மனம் வருந்தி ஆண்களும் பெண்களும் எல்லாரும் அழுதார்கள். பிறகு பூமாலைகளையும் சந்தனம் முதலிய நறுமணப் பொருள்களையும் எடுத்துக்கொண்டு இன் னிசை வாத்தியங்களுடன் வந்து பகவன் புத்தருடைய திருமேனிக்கு அலங்காரம் செய்து வணங்கி இசைகள் வாசித்தும் அவர் புகழைப் பாடியும் கொண்டாடினார்கள். இவ்வாறு ஏழு நாட்கள் நடைபெற்றன.

பிறகு மள்ளர் தலைவர் எண்மர் முழுகிக் குளித்துப் புதிய ஆடைகள் அணிந்து பகவன் புத்தருடைய திருமேனியைத் தீயிட்டுக் கொளுத்தத் தூக்கினார்கள். அவர்களால் தூக்க முடிய வில்லை. திருமேனி எழும்பவில்லை.

அப்போது குசி நகரத்து மள்ளர் வியப்படைந்து வணக்கத்துக் குரிய அநுருத்த தேரரை இதன் காரணம் என்ன வென்று கேட்டார்கள்: அதற்கு அனுருத்த தேரர் “வாசெந்தர்களே! இதன் காரணம் என்ன வென்றால் உங்கள் எண்ணம் ஒன்றாக இருக்க, தேவர்களின் எண்ணம் வேறொன்றாக இருப்பதுதான்” என்று கூறினார்.

“தேவர்களின் எண்ணம் என்ன?” என்று அவர்கள் கேட் டார்கள்.

“உங்களுடைய எண்ணம் பகவருடைய திருமேனியை நகரத்தின் தெற்கே கொண்டுபோய் தீயிலிட்டு எரிக்க வேண்டும் என்பது. தேவர் களின் எண்ணம் என்னவென்றால், திருமேனியை நகரத்தின் வடக்கே