| 154 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 9 |  
 
 அடிக்குறிப்புகள் 1. பத்துப்பார மிதைகளாவன: 1. தானம் 2. சீலம் (ஒழுக்கம்) 3. நெக்கம்மம் (ஆசைகளை அகற்றிப் பிறர் நலத்துக்காக வாழ்தல்) 4. பஞ்ஞா (ஞானம்) 5. வீரியம் (ஆற்றல்) 6. கந்தி (பொறுமை) 7. வாய்மை (பத்தியம்) 8. அதிட்டானம் (ஒழுக்கம் நேர்மை இவற்றி லிருந்து பிறழாமல் இருத்தல்) 9. மேத்தை (அன்பும் அருளும் உடைமை) 10. உபேக்ஷை (விருப்பு வெறுப்பு இல்லாதிருத்தல்) 2. உதானம் - பிரீதிவாக்கியம். 3. மணிமேகலை 30: 104 - 118. இது, விநயபிடகத்தின் மகாவக்கம் என்னும் பிரிவில் முதல் காண்டத்தில் உள்ள பாலி மொழி வாக்கியத் தின் சொல்லுக்குச் சொல் நேர் மொழி பெயர்ப்பாக இருக்கிறது. 4. மணிமேகலை 30 : 119-133 இது, விநயபிடகம் மகாவக்கம் முதல் காண்டத்தில் உள்ள பாலி மொழி வாக்கியத்தின் நேர் மொழி பெயர்ப்பாக அமைந்திருக்கிறது. 5. ஆசவம் - காமம், பவம் - திட்டி, அவிஜ்ஜை என்பன.  6. கிருத்தியம், கிருதம் என்பதற்கு முறையே செய்த, செய்கின்ற என்பது பொருள்.  |