160 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 9 |
தசசீலம் (பத்து ஒழுக்கம்) பௌத்தரில் இல்லறத்தார் பஞ்ச (ஐந்து) சீலங்களை மேற்கொள்ள வேண்டும். துறவறத்தார் தச (பத்து) சீலங்களை மேற்கொள்ள வேண்டும். சீலத்தைச் சிக்காபதம் என்றும் கூறுவர். தச சீலத்திலே பஞ்ச சீலங்களும் அடங்கியுள்ளன. இல்லறத்தார் பஞ்ச சீலங்களையும், துறவறத்தார் தச சீலங்களையும் தினந்தோறும் ஓத வேண்டும். தச சீலத்தின் பாலி மொழி வாசகம் இது: 1.பானாதி பாதா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி 2.அதின்னாதானா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி 3.அஹ்ப்ரஹ்மசரியா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி 4.மூஸாவாதா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி 5.ஸுராமேரய மஜ்ஜப மாதட்டாணா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி 6.விகால போஜனா வேரமணி ஸிக்காபதம் ஸாதியாமி 7, 8, 9.நச்சகீத வாதித விலரக்க தஸ்ஸனமால கந்த விவப்பண தாரணமண்டன விபூஷணட்டானா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி 10.உட்சாசன மஹாசயன வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி இதன் பொருள் வருமாறு: 1. உயிர்களைக் கொல்லாமலும் இம்சை செய்யாமலும் இருக்கும் சீலத்தை (ஒழுக்கத்தை) மேற்கொள்கிறேன். 2. பிறர் பொருளைக் களவு செய்யாமலிருக்கும் சீலத்தை மேற் கொள்கிறேன். 3.பிரமசரிய விரதம் என்னும் சீலத்தை மேற்கிறேன். (இது இல்லறத் தாருக்குப் பிறர் மனைவியரிடத்தும் பிற புருஷரிடத்தும் விபசாரம் செய்யாமல் இருப்பது என்று பொருள்படும். துற வறத்தாருக்குப் பிரமசரிய விரதம் என்பது இணை விழைச்சியை அறவே நீக்குதல் என்று பொருள்படும்.) 4. பொய் பேசாமலிருத்தல் என்னும் சீலத்தை மேற்கொள்கிறேன். |