பக்கம் எண் :

தமிழில் சமயம் - கௌதம புத்தரின் வாழ்க்கை53

அடிக்குறிப்புகள்

1. அநாகாமிக பிரமதேவர் - தூய மனமுடைய மகாபிரமர்

2. சதுர் மகாராஜிக தேவர் - நான்கு திக்குப் பாலகர். திருதராட்டிரன், விருபாக் கன், விருளாக்ஷன், வைசிரவணன் என்பவர்.

3. போதிசத்துவர் புத்தரான பிறகு, நாலக முனிவர் இமய மலையி லிருந்து வந்து அவரிடம் ஞானோபதேசம் பெற்று மீண்டும் இமய மலைக்குச் சென்றார். நாலக முனிவருக்குப் புத்தர் அருளிய உபதேசங்களைச் சூத்திர நிபாதத்தின் நாலகச் சூத்திரங்களில் காணலாம்.

4. அர்த்தசித்தி - உயர்ந்த மேன்மையைக் கொடுப்பது.

5. விம்பசார காவியம்

6. இவரைச் சர்வமித்திரர் என்றும் கூறுவர்.