பக்கம் எண் :

தமிழில் சமயம் - பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்193

யாழை வாசித்து ஒரு பண் பாடவேண்டும் என்று அவள் அவனை வேண்டிக்கொண்டாள். இவன், ‘நாம் யாழ் வித்தையை அறிந்துள்ளோம் என்பதை இவள் எப்படியோ தெரிந்து கொண்டாள். இவள் நுண்ணறிவினாள்’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டான். ஆனாலும், “நான் யாழ் வித்தையில் வல்லவன் அல்லன்” என்று கூறினான். “மிக்க அறிஞராகிய உமக்கு இந்தவித்தை தெரியாம லிருக்காது அன்பு கூர்ந்து யாழை இசைத்து ஒரு பண் பாடியருள்க” என்று ஐராவதி அவனை இரந்து வேண்டினாள்.

பண்ணுமை நிறீஇயோர் பாணிக் கீதம்
பாடல் வேண்டுமென்று ஆடமைத் தோளி
மறுத்துங் குறைகொள. மறத்தகை மார்பன்
‘என்கட் கிடந்த எல்லாம் மற்றிவள்
தன்கண் மதியில் தான்தெரிந் துணர்ந்தனள்
பெரிதிவட் கறிவு’ எனத் தெருமந் திருந்து ‘இது
வல்லுநன் அல்லேன் நல்லோய்! நான்’ என
‘ஒருமனத் தன்ன ஒற்றார்த் தேற்றா
அருவினை இல்லென அறிந்தோர் கூறிய
பெருமொழி மெய்யெனப் பிரியாக் காதலோடு
இன்ப மயக்கம் எய்திய எம்மாட்டு
அன்பு துணையாக யாதொன் றாயினும்
மறாஅது அருள்’ என

ஐராவதி அவனைக் கேட்டுக் கொண்டாள்.

அதற்கு இவன் இணங்கினான். தன்னுடைய கோடபதி யாழ் பிரிந்து போன பிறகு வேறு யாழை வாசிக்காமலும் இசை பாடாமலும் இருந்த இவன் இப்போது யாழ் வாசித்து இசை பாடினான். அந்த இசையமுதம் அங்கிருந்த புறா, கிளி முதலியவை களின் மனத்தையுங் கவர்ந்தது.

ஆறாக் காதலில் பேரிசை கனியக்
குரலோர்த்துத் தொடுத்த குருசில் தழீஇ
இசையோர் தேய இயக்கமும் பாட்டும்
நசைவித்தாக வேண்டுதிர் நயக்கெனத்
குன்றா வனப்பில் கோட பதியினை
அன்றாண்டு நினைத் தஃது அகன்ற பின்னர்
நலத்தகு பேரியாழ் நரம்பு தொட்டறியா