பக்கம் எண் :

188கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

விருட்சத்தில் நீண்ட படர்ந்த கிளைகள் ஏராளம். அவற்றில் மனத்தைக் கவரும் கிளைகள் சுரதா, முடியரசன், கண்ணதாசன், வாணிதாசன் ஆகிய நான்கு என்று எனக்குத் தோன்றுகிறது.

அவருக்குக் கைவந்த யாப்பு முறை எண்சீர் விருத்தமாகும். எண்சீர் விருத்தம் அமைப்பதில் கவிஞர் பாரதிதாசனுக்கு ஈடு கொடுத்து நிற்பவர் இளங்கவிஞர்களில் கவிஞர் முடியரசன் முதல்வர் என்பது எனது கருத்தாகும். ஆனால் ஏனோ அறுசீர் விருத்தங்களில் கவிஞர் தோல்வியே கண்டுள்ளார்.

உவமை நயம் சிறக்கப் பாடுவதிலும், இயற்கையழகை ரசித்து நமக்குச் சொல்வதிலும் வல்லவராக, பாரதிதாசனின் சிறந்த வாரி சாக நமக்குக் காட்சியளிக்கிறார்.

கவிஞர் இலக்கண விஷயத்தில் மிகக் கண்டிப்புள்ளவர். அதனைத் தமது கவிதைகளின் மூலம் பல இடங்களில் வற்புறுத்திக் கூறியுள்ளார்.

இரண்டாவது ‘இயற்கை உலகத்’துக்கு கவிஞருக்குப் பாராட்டு வாங்கிக் கொடுக்கக் கூடிய கவிதைகள் இதிலும் ‘தொழில் உலகம்’ என்னும் பிரிவிலுந்தான் இருக்கின்றன. இயற்கை உலகில் முடியரசனுள் பாரதிதாசன் ஆதிக்கம் செலுத்துகிறார்.

இந்தக் (ஆறு) கவிதையைப் படித்து முடித்தவுடனேயே நமக்கு ஒரு நிறைவு கவிஞரிடத்தில் ஏற்படுகிறது. ஆற்றின் மூலமாகச் சமூகச் சுரண்டலை, தீண்டாமைக் கொடுமையை, ஆட்சியாளர் போக்கை, அனைத்துக்கும் மேலாக மனிதனின் பேராற்றலை நமக்கு எடுத்துக்காட்டும்பொழுது இந்தக் கவிதை மூலம் ஒரு புதுமை விளைத்துள்ளார் என்றுதான் நமக்குக் கூறத் தோன்றுகிறது. ஆறு என்கிற இந்தக் கவிதை முடியரசனின் சிறந்த, நிலைத்து நிற்கக் கூடிய படைப்பு என்பது என் அபிப் பிராயம்.

பொதுவாகக் கவிஞர் இயற்கைக் காட்சிகளைப் பற்றிப் பாடியிருப்பவைகள் எல்லாம் சமூக உண்மைளை இணைத்துப் பிணைத்த ஒரு கலவைக் காட்சியாகத் தான் நம் முன் காட்சி யளிக்கிறதே அன்றி, வெறும் அழகு நுகர்ச்சிப் போக்கில்