பக்கம் எண் :

34மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 10

மகள் விசாகைக்கு அளவற்ற பொன்னையும் பொருளையும் ஏராளமான பசுமந்தைகளையும் பணிப்பெண்கள், பணியாளர்கள் முதலான ஊழியர்களையும் சீதனப் பொருளாக வழங்கினார். சிறப்புகளும் விருந்துகளும் நடந்த பின்னர், மணமகனுடன் மணமகளைப் புக்ககத்திற்கு அனுப்பினார்கள். அனுப்புவதற்கு முன்பு தனஞ்சயச் சீமான் விசாகையை அழைத்து அறிவுரைகள் கூறினார்: “அம்மா, விசாகை! நீ புக்ககத்தில் வாழ்கிறபோது நடந்துகொள்ள வேண்டிய சில முறைகள் உள்ளன. அவற்றைக் கூறுகிறேன்; உன்னிப்பாகக் கேள். கேட்டு அதன்படி நடந்துகொண்டால் நன்மையடைவாய்” என்று சொல்லி அறிவுரைகளை வழங்கினார். அப்போது விசாகையின் மாமனாராகிய மிகாரச் சீமானும் அங்கிருந்தார். தனஞ்சயச் சீமான் தன் மகளுக்குக் கூறிய அறிவுரை இது: “வீட்டு நெருப்பை அயலாருக்குக் கொடுக்காதே; அயலார் நெருப்பை வீட்டுக்குள் கொண்டு வராதே. கொடுக்கிறவர்களுக்குக் கொடு; கொடாதவர்களுக்கு கொடாதே; கொடுக் கிறவர்களுக்கும் கொடாதவர்களுக்கும் கொடு. சிரித்துக்கொண்டு உட்காரு. சிரித்துக்கொண்டு சாப்பிடு. சிரித்துக்கொண்டு தூங்கு. எரி ஓம்பு. குல தெய்வங்களை வ'99ங்கு.”

இவைகளைக் கேட்ட விசாகை, இவ்வாறே செய்வதாகத் தந்தையிடம் கூறினாள். அருகில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த மிகாரச் சீமானுக்கு இவை ஒன்றும் விளங்கவில்லை. ‘இது என்ன பைத்தியம்! வீட்டு நெருப்பைக் கொடுக்காதே; அயல் நெருப்பைக் கொண்டு வராதே. சிரித்துக் கொண்டே தூங்கு, இதெல்லாம் என்ன கோமாளித்தனம்’ என்று தமக்குள் எண்ணினார். ஆனால் அப்போது அவர் ஒன்றும் பேசவில்லை.

விசாகை, மணமகனுடன் புக்ககம் வந்து சேர்ந்தாள். அவள் தன் கணவ னுக்கும் மாமன் மாமிக்கும் மற்றவர்களுக்கும் செய்ய வேண்டிய கடமை களை முறைப்படி சரிவரச் செய்து கொண்டிருந்தாள். சில திங்கள் கழிந்தன.

ஒரு நன்னாள், விசாகையின் மாமனார் பொன்தட்டுகளிலே சுடச்சுட நெய்ப்பொங்கலும் பால் பாயசமும் அருந்திக் கொண்டிருந்தார். விசாகை அருகில் நின்று விசிறிக் கொண்டிருந் தாள். அப்போது ஒரு பௌத்தப் பிக்கு அவ்வீட்டில் பிச்சைக்கு வந்தார். மாமனார் அவரைக் கண்டும், காணாதவர்போல உணவை அருந்திக்கொண்டிருந்தார். பிச்சையை எதிர்பார்த்து, பிக்கு காத்துக்கொண்டிருந்தார். மாமனார் அவரைப் பாராதவர் போல இருந்து உணவு கொள்வதில் கண்ணுங்