பக்கம் எண் :

102மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 11

இந்தக் கதையைக் கேட்டபோது, காதல் மயக்கத்தில் இருந்த பிக்கு அதிருந்து நீங்கி, சுரோத்தாபத்தி நிலையை யடைந்தார். பகவன் புத்தர், அக்காலத்தில் இக்கதையில் உள்ளவர்களையும், இப்போதுள்ளவர் களையும் சுட்டிக் காட்டினார். அக்காலத்தில் ஆனந்தர், சுநந்தர் என்னும் தேரோட்டியாகவும், சாரிபுத்தர் அஹி பாரகனாகவும், உப்பலவன்னை உம்மாதந்தியாகவும், புத்தரின் சீடர்கள் அரசனுடைய பரிவாரங்களாக வும், தாம் சிவி அரச குமாரனாகவும் இருந்ததாகவும் புத்தர் பெருமான் கூறினார்.

அடிக்குறிப்புகள்

1. உம்மாதந்தி ஏன் இவ்வளவு பெற்றிருந்தாள் என்றால் இவள் முற்பிறப்பிலே ஒரு பிக்குவுக்குத்தான் அருமையாகப் பெற்ற புதிய ஆடைகளைத் தானம் செய்தபடியினால் அத் தானத்தின் பயனாக இப்பிறப்பிலே கண்கவரும் கட்டழியாகப் பிறந்தாள் என்று சொல்லப்படுகிறது.