பக்கம் எண் :

110மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 11

கற்பிக்கும்படி தமது மகனுக்குக் கூறினார்கள். தனது பெற்றோர் அடிக்கடி வற்புறுத்திக் கூறியதை மறுக்கமுடியாமல் போதிசத்துவர், மூசிலனுக்கு யாழ் வித்தையைக் கற்பித்தார்.

இசைக்கலையைக் கற்றுக்கொண்ட மூசிலன், போதிசத்து வருடன் அரண்மனைக்குப் போனான்.

மூசிலனைக் கண்ட அரசன், “இசைவாணரே! இவர் யார்?” என்று கேட்டான்.

“பெருமானடிகளே! இவன் என்னுடைய மாணவன்” என்று விடை கூறினார்.

அரசர் பெருமான் மூசிலனைப்பற்றி பையப்பைய அறிய லானார்.

போதிசத்துவர் இசைக்கலையை ஒளிக்கவில்லை. தாம் அறிந்த இசை பற்றிய எல்லா வித்தைகளையும் தன் மாண வனுக்குக் கற்பித்தார். கடைசியில், “நான் அறிந்த வித்தையை எல்லாம் உனக்குக் கற்பித்து விட்டேன்” என்று கூறினார்.

மூசிலன் தனக்குள் எண்ணினான்: ‘இசைக்கலையில் நான் தேர்ச்சியடைந்துவிட்டேன். இந்தக் காசி மாநகரம் பாரத நாட்டின் தலை நகரமாக விளங்குகிறது. என்னுடைய ஆசிரியரோ கிழவர் ஆகி விட்டார். நான் இந்த நகரத்திலேயே தங்குவது நல்லது என்று இவ்வாறு எண்ணிய மூசிலன் தனது ஆசிரியரைப் பார்த்து, “ஐயா, நான் அரண் மனையில் ஊழியம் செய்ய எண்ணுகிறேன்” என்று கூறினான். “நல்லது. இதுபற்றி அரசர் பெருமானிடம் பேசுகிறேன்” என்றார் ஆசிரியர்.

அவர் அரசனிடம் சென்று கூறினார்: “என்னுடைய மாண வன், பெருமானடிகளிடம் ஊழியம் செய்ய விரும்புகிறான். அவ னுடைய ஊதியம் எவ்வளவு என்பதைத் தெரிவித்தருள வேண்டும்.”

“உமது ஊதியத்தில் செம்பாதியாக இருக்கும் உமது மாண வனுடைய ஊதியம்” என்று கூறினார் அரசர் பெருமான்.

போதிசத்துவர் தன் மாணவனிடம் இதைத் தெரிவித்தார். மூசிலன் கூறினான்: “தங்களுக்குக் கொடுக்கும் ஊதியத்தை அரசர்