தமிழில் சமயம் - புத்த ஜாதகக் கதைகள் | 123 |
விடுவான். பிறகு காசு கேட்பான். அவர்கள் காசு கொடாவிட்டால் அவர்களிடம் சண்டை பிடிப்பான். அவர்கள் அவனை வைது அடிப்பார்கள். இவ்வாறு இவனுடைய மூடத்தனத்தினாலே வசவுகளை யும் அடியையும் சண்டைகளையும் பெற்றுவந்தான். போதிசத்துவர் ஓடக்காரனிடம் வந்து, “நண்ப! என்னை அக்கரைக்குக் கொண்டுபோய் விடு” என்று சொன்னார். “பிக்குவே! எனக்கு என்ன கொடுப்பீர்?” என்று கேட்டான். “உன்னுடைய வருவாயையும் உனது நன்மையையும் உனது அறிவையும் வளர்த்துக் கொள்ளும் வழியை உனக்குச் சொல்லுவேன்” என்று கூறினார். இவர் கட்டாயம் ஏதேனும் கொடுப்பார் என்று ஓடக்காரன் நினைத்துக் கொண்டு, ஓடத்தில் ஏற்றி அக்கரைக்குக் கொண்டுபோய் இறக்கி, “எனக்கு காசு கொடு”என்று கேட்டான். போதிசத்துவர், அவன் எவ்வாறு வருவாயை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைக் கூறினார். “அக்கரைக்குப் போகி றவர்களிடம் முன்னமே காசு வாங்கிக்கொண்டு பிறகு அவர்களை அக்கரைக்குக் கொண்டுபோய் இறக்கு. ஏனென்றால், மக்கள் பலவிதமாக இயல்புடையவர்கள். துறையைக் கடப்பதற்கு முன்பு ஒரு எண்ணமும், கடந்தபிறகு வேறு எண்ணமும் கொள்வார்கள். ஆகவே, முதலில் காசு பெற்றுக்கொண்டு பிறகு அக்கரைக்குக் கொண்டுபோய் விடு.” ஓடக்காரன், ஏதோ அறிவு கூறுகிறார்; பிறகு காசு கொடுப் பார் என்று எண்ணிக்கொண்டான். பிறகு, போதிசத்துவர் கூறினார்: “நீ வருவாயை வளர்த்துக்கொள்ளும் வழியைக் கூறினேன். இனி உன்னுடைய நன்மையையும் அறிவையும் வளர்த்துக் கொள்ளும் வழியைக் கூறுகிறேன் கேள். நாட்டில் இருந்தாலும், காட்டில் இருந்தாலும், கடலில் இருந்தாலும், கரையில் இருந்தாலும் கோபம் கொள்ளாதே.” மந்த புத்தியுள்ள ஓடக்காரன், அறவுரையின் நன்மையையுணராமல், “பிக்குவே! இது தானா? நீ எனக்குக் கொடுக்கும் கூலி” என்று கேட்டான். “ஆமாம் நண்ப!” “இது எனக்குத் தேவையில்லை. வேறு ஏதேனும் கொடு.” “நண்ப! இதைத்தவிர, உனக்குக் கொடுக்க என்னிடம் வேறு ஒன்றும் இல்லை.” |