பக்கம் எண் :

தமிழகக் கலை வரலாறு - சிற்பம் - கோயில்167

வணியோர்க் கடவச் சக்கர வர்த்தி
பணியி னின்றும் அருளும் என்ப
நவநிதி எல்லாம் நன்கொடு சிறந்தே.

மாவானைத் தச்சன்பெண் மன்னுசே னாபதியும்
காவாளன் சோதிடனும் காகணியும் - தாவாத
சக்கரம் தோல் குளா மணிதண்டு தண்குடைவாள்
இக்கிரமத் தேழிரண்டாம் ஈங்கு.

இச்சொல்லப்பட்ட பதினான்கு இரத்தினங்களுள்
ஜீவரத்தினம் ஏழு.

யானைதேர் குதிரை கருவி காலாள்
எத்தனை சூழினும் அத்தனைக்கு மத்தனையாகி
உழிதரு மரகதமேனி மாவென்னு மிரத்தினமும்,
அண்டமுற நிமிர்வரைபோ ரானைகளுக் கரியேயாய்
எண்டிசையும் படையிரிய விடியுருமா வெனமுழக்கிக்
காற்றுத்தீ எனக்கடுகிக் காலத் துயிருண்ணும்
கூற்றுப்போல் கொடியதொரு கொலைக்களிறாம் இரத்தினமும்,
பரிப்பந்தி தேர்க்கூட்டம் பாய்களிற்றின் ஒலிகளுடன்
பெருத்துயர்ந்த திண்மதிலும் பீடார்ந்த மண்டபமும்
அம்பலங் களுமறச் சாலையுங்கூ டங்களும்
கோபுரங்களும் குறைவின்றி நிறைவெய்தப்
பன்னிரண்டோ சனைவிரிவாம் பதியமைக்கும் பெருந் தச்சனும்,
சீதகாலத்தி லுஷ்ணமாய்ச் செழுங்கோடையில் குளிர்சிறந்து
காதல் பெருகும் கவின் இளமையும்
வேந்தர்களால் விருப்புடைய விரைகுழலா ரனைவரிலும்
ஆய்ந்ததோர் குணமுடைய அருங்கலப்பெண் இரத்தினமும்,
போர்த்தொழிற்கண் நிலையுடைமையும் பொருபடையின் வித்தகமும்
ஆர்த்தமைந்த வாகனங்களின் அழகமைந்த பெருங்கல்வியும்
யூகங்களை வகுக்க வன்மையும் உற்றிடத்துப் பேராண்மை
வேரங்களால் செயிர்த்துவந்த வேற்றரசை வெல்திறமும்
செப்பியவும் பிறகுணமும் செய்துதன் நலங்காட்டும்
அப்படித்தாய் அரசுவக்கும் சேனாபதி ரத்தினமும்,
எப்பொருளும் அறநெறியால் ஈண்டியபண் டாரங்களை