| 218 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 12 |
அமைக்கப்பட்டுள்ளது. வழக்கப்படி முன் மண்டபமும் கர்ப்பக் கிருகமும் உள்ளன.15 இது திருமால் கோயில். கிழக்கு முகமாக அமைந்துள்ள இக் கோயில் மண்டபம் பதினெட்டு அடி நீளம் உடையது. அகலம் 13 அடி 6 அங்குலம், உயரம் 9 அடி. மண்டபத் தூண்கள், மகேந்திர பல்லவன் தூண்கள் போன்ற அமைப்புள்ளவை; தாமரைப் பூவின் உருவம் பொறிக்கப் பட்டவை. திருநிலையறையின் வாயிலில் துவாரபாலகர் உருவங்கள் உள்ளன. சாந்தமாகக் காணப்படுகிற இந்த உருவங்கள் இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றி நிற்கின்றன. திருநிலையறைக்குள் நரசிங்கப் பெருமாள் உருவம் அமைக்கப் பட்டிருக்கிறது. ஆனால், இது பழைய காலத்து உருவம் அன்று; பிற்காலத்தது. 
இங்கு மண்டபத் தூண் ஒன்றில், பல்லவக் கிரந்த எழுத்துச் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் வாசகம் இது: மஹிததமம் ஸதாமுப மஹேந்த்ர தடாகமித ஸ்திரமுருகாரிதம் குணபரேண விதார்ய ஸிலாம் ஜனநயனாபிரம குணதாமி மஹேந்த்ர புரே மஹதி மஹேந்த்ர விஷ்ணுக்ருஹா நாம முராரிக்ருஹ: |