316 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 12 |
ஆர்க்கியாலஜி எபிகிராபி ஆராய்ச்சி மட்டுமல்லாமல், ஏனைய சிற்பம் ஓவியம் இலக்கியம் முதலியவற்றின் துணைக்கொண்டும் இந்நூல் ஒருவாறு எழுதப்பட்டது. இந்நூலைப் படிப்போர் செய்யவேண்டிய கடமையுண்டு. மகேந்திரவர்மன் அமைத்த குகைக்கோயில்களையும் அவற்றில் உள்ள சிற்பங்களையும் கண்டுகளித்து, அக் கலைச்செல்வங்களை அழிவுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் இதைப் படிப்போர்களைச் சார்ந்தன. ஏனென்றால், நம் நாட்டுக் கலைச்செல்வங்கள் நமக்குச் சொந்தமானவை என்பதை நம்மவரில் பெரும்பாலோர் இன்னும் உணரவில்லை. இப் பொறுப்பை உணர்ந்து அவற்றைப் பாதுகாக்கவேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும். இக் கலைச்செல்வங்களைப் பொன்னேபோல் போற்றவேண்டும். இந்நூலை நல்லமுறையில் அச்சிட்டு வெளியிட்ட சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாருக்கும், அக் கழகத்தின் ஆட்சிப் பொறுப்பாளர் திரு. வ. சுப்பையாபிள்ளை அவர்களுக்கும் எனது நன்றி யுரியதாகும். மலரகம், மயிலாப்பூர் சென்னை - 4 மயிலை.சீனி. வேங்கடசாமி 10-3-55 |