பக்கம் எண் :

தமிழகக் கலை வரலாறு - சிற்பம் - கோயில்55

பூந்தோட்டத்திலே ஒரு பொய்கை. அப்பொய்கையில் தாமரைப் பூக்கள் புத்தம் புதிதாகப் பூத்திருக்கின்றன. அப்பொய்கைக் கரையில் அடர்ந்து வளர்ந்துள்ள தாழம் புதர்களில் தாழம் பூக்கள் கமகமவென்று வாசனை வீசுகின்றன. அங்கு வீசிய காற்றினால், தாழம்பூவிலிருந்து துகள் காற்றில் பறந்து தாமரைப் பூக்களில் படிந்தன. இக் காட்சியைச் சீத்தலைச் சாத்தனார்,

“விரைமலர்த் தாமரை
     சுரைநின் றோங்கிய
கோடுடைத் தாழைக்
     கொழுமடல் அவிழ்ந்த
வால்வெண் சுண்ணம்
     ஆடிய திதுகாண்”

என்று காட்டுகிறார்.

வானத்தில் வெண்ணிலா தோன்றுகிற மாலை நேரத்திலே ஆம்பல் மலர்கள் மலர்ந்தன. அப்போது மலர்ந்திருந்த தாமரைப் பூக்கள் இதழ்களை மூடிக் கூம்பின. காலையில் சூரியன் தோன்றும் போது தாமரை மலர்கள் மலர்ந்தன; ஆம் பல் மலர்கள் குவிந்தன. இந்த இயற்கையைக் காட்டி உலகியல் முறையை விளக்குகிறார் சூளாமணி ஆசிரியர் தோலாமொழித் தேவர்:

“அங்கொளி விசும்பில் தோன்றும்
     அந்திவான் அகட்டுக் கொண்ட
திங்களங் குழவிப் பால்வாய்த்
     தீங்கதிர் அமுதம் மாந்தித்
தங்கொளி விரிந்த ஆம்பல்;
     தாமரை குவிந்த, ஆங்கே
எங்குளார் உலகில் யார்க்கும்
     ஒருவராய் இனிய நீரார்?”

தாமரைப் பூக்களைப் புலவர்கள் பலவாறு புகழ்ந்துரைத் துள்ளனர். ஒருதனி ஓங்கிய விரை மலர்த் தாமரை, தேனுந் தொழுகுஞ் செவ்வித் தாமரைப் போது, புனலெரி தவழ்ந்தெனப் பூத்த தாமரை, தாளுடைத் தடங்கொள் செவ்வித் தாமரைப் போது, தண்ணென்தாமரை, அலர்ந்த அத்தாமரை, தேனிமிர் தாமரை, வண்டலர் பூந்தாமரை என்று