பக்கம் எண் :

  

கோயில் சிற்பங்கள்

நுண்கலைகளில் சிற்பக்கலையும் ஒன்று என்பதை அறிந்தோம். உலகத்தில் காணப்படுகிற இயற்கையான உருவங்களையும் செயற்கையாகக் கற்பிக்கப்பட்ட உருவங்களையும் சிற்பாச்சாரிகள், சுதை மரம் கல் பஞ்சலோகம் முதலான பொருள்களினால் செய்கிறார்கள்.

“கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்
மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்
கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை
பத்தே சிற்பத் தொழிற்குறுப் பாவன”

என்று திவாகர நிகண்டு கூறுகிறது.

நம்முடைய கோயில்களிலே சிற்ப உருவங்கள் அமைக்கப் படுகின்றன. கோயில் கட்டடத்தின் தரை, சுவர், தூண்கள், விமானம், கோபுரம் முதலான எல்லா இடங்களிலும் சிற்ப உருவங்களைப் பார்க்கிறோம். சிற்ப உருவங்கள் அமையப்பெறாத கோயில் கட்டடங்கள் இல்லை என்றே கூறலாம். கோயில் சிற்பங்களில் பெரும் பாலன தெய்வ உருவச் சிற்பங்களாக காட்சியளிக்கின்றன. தெய்வ வழிபாட்டுக்குரிய கோயில்களை நம்முடைய முன்னோர் கலைக்கூடங் களாகவும் அமைத்தார்கள். ஆகையினால்தான் கோயில்களிலே சிற்பங்களையும் ஓவியங்களையும் காண்கிறோம்.

கடவுள் வழிபாட்டுக்குரிய கோவில்களிலே ஆதி காலத்தில் கடவுளின் உருவங்களை வைத்து வணங்கவில்லை. கடவுளின் உருவத்துக்குப் பதிலாகக் குறிப்பிட்ட அடையாளங்கள் வைத்து வணங்கப்பட்டன. உதாரணமாகச் சிலவற்றைக் காண்போம். முருகக் கடவுளின் கோயிலில் பழங்காலத்தில் முருகன் உருவம் வைக்கப் படாமல் முருகனைக் குறிக்கும் அடையாளமாக வேலாயுதம் வைத்து


நுண்கலைகள் (1967) நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை.