பக்கம் எண் :

102மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

கழலும் மருளுநஞ் சென்னி வைத்தோன் கனகச் சிலம்பிற்
சுழலும் மலரும் மசோகும் பலாசுந் துடரா தெழிந்திட்
டழலின் புறத்து வெண்ணீ றொத்தனநம் மணிவாளையார்
குழலும் அளகமும் பெய்யக் கொய்யாத குராமலரே.    98

குராமலை கொண்ட உலகொளி மதியமுங் கோளரவும்
இராமலை வான்பகை யென்பது பொய்மெய்ம்மையோர்க்கருளுஞ்
சிராமலை வானவன் சென்னியின் மேற்கொண்ட சீர்மையினாற்
கராமலை நீர்க்கங்கை பாலுடன் வாழ்கின்ற கண்டனரே.    99

கண்டன கேட்டன வுற்றன காம ரறுசுவையா
லுண்டன மோந்தன வைம்பொறி யுள்ளு முயிர் தழைப்பக்
கண்டன கேட்டன வுற்றன காம ரறுசுவையா
லுண்டன மோந்தன பொன்மலையாளை கயர்க் கோக்கினவே. 100

ஓக்கிய கையோ டொருக்கிய வுள்ளத்தி யோக்கியர்தம்
வாக்குயர் மந்திரம் வானரங் கற்று மந்திக் குரைக்குந்
தேக்குயர் சாரற் சிராமலைக் கூத்தன்செம் பொற்கழல்மே
லாக்கிய சிந்தை யடியார்க் கென்னோ வின்றரியனவே.    101

அரியன சால வெளிய கண்டீ ரருவித் திரள்கள்
பரியன நேர்மணி சிந்துஞ் சிராமலைப் பால்வண்ணனைக்
கரியன செய்யன நுண்புகர்ப் பைங்கட் கடாக்களிற்றி
னுரியனை நாழிகை யேத்தவல் லார்க்கிவ் வுலகத்துளே.    102

மற்பந்த மார்வன் மணியன் மகன் மதிள் வேம்பையர்கோ
னற்பந்தமார் தமிழ் நாராயணஞ் சிராமலைமேற்
கற்பந்த னீழலில் வைத்த கலித்துறை நூறுங் கற்பார்
பொற்பந்த னீழ லரன்றிருப் பாதம் பொருந்துவரே.    103

மாட மதிரை மணலூர் மதிள்வேம்பை
யோடமர் சேஞலூர் குண்டூர்இந் - நீடிய
நற்பதிக் கோனா ராயணஞ் சிராமலைமேற்
கற்பதித்தான் சொன்ன கவி.    104

குறிப்பு :- இவ்வந்தாதியைத் தருமபுர ஆதீனத்தார் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். சாசனச் செய்யுளில் மறைந்து போன சொற்களுக்கு அவர்கள், தமது யூகம்போலச் சொற்களை அமைத்து