பக்கம் எண் :

112மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

கந்தன் மாதவன்

இடம் : தஞ்சாவூர் மாவட்டம், மாயவரம் தாலுகா, நீடூர். இவ்வூர் சிவன்கோவிலின் தென்புறச்சுவரில் உள்ள சாசனம்.

பதிப்பு : இந்திய சாசனங்கள், தொகுதி பதினெட்டு : பக்கம் 64 - 69. (Epigraphia Indica Vol. XVIII. PP.64 - 69.)

விளக்கம் : மிழலைநாட்டு வேள் கந்தன் மாதவன் என்பவர் நீடூர் சிவாலயத்தில் செய்த திருப்பணிகளைக் கூறுகின்றன இச் செய்யுள்கள். கந்தன் மாதவனுடைய முன்னோர் அமிதசாகர முனிவரைக் கொண்டு யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலம் என்னும் நூல்களை இயற்றுவித்தனர் என்பதையும் இச்செய்யுள்கள் கூறுகின்றன.

சாசனச் செய்யுள்

கூரிய வுல கனைத்துங் குடைக்கீ
     ழாக்கிய குலோத்துங்க சோழர்க்
காண்டொரு நாற்பத்தா றதனிடைத் தில்லை
     யம்பலத்தே வட கீழ்ப்பால்

போரியல் மதத்துச் சொன்னவா ரறிவார்
     கோயிலும் புராணநூல் விரிக்கும்
புரிசை மாளிகையும் வரிசையால் விளங்கப்
     பொருப்பினால் விருப்புறச் செய்தோன்.

நேரியற் காண்டே ழைஞ்சுடன் மூன்றினில்
     நிகரிலாக் கற்றளி நீடூர்
நிலவினாற் கமைத்த நிலாவினா னமுத
     சாகர னெடுத்த . . தொகுத்த

காரிகைக் குளத்தூர் மன்னவன் தொண்டை
     காவலன் சிறுகுன்ற நாட்டுக்
கற்பகம் மிழிலை நாட்டுவே ளாண்
     டவன் கந்தன் மாதவனே.    1

களத்தூர்க் கோட்டத்து மருதத்தூருடையான் குன்றன் திருச் சிற்றம்பலமுடையானேன் கன்னி நாயற்று ஏழாந் தியதியுந் திங்கட் கிழமையும் பெற்ற உத்திரட்டாதி நாள் இத் திருப்பெருமா னாண்டார்