பக்கம் எண் :

168மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

கூவம் என்னும் ஊரில் இருந்த சாமுண்டி என்பவரின் மகனான பெருந்தச்சன் என்னும் சிற்பியின் கனவிலே சிவபெருமான் தோன்றிக் கல்லினால் ஒரு நந்தியைச் செய்துவை என்று கூற, அதன்படியே அவன் இந்த நந்தியைச் செய்து இதன் வாயிலிருந்து நீர்வரும்படி அமைத்தான் என்பது இதன் பொருள்.

இங்கு இன்னுஞ்சில கல்வெட்டுழுத்துக்கள் உள்ளன. அவை அவ்வளவு முக்கியமானவை அல்ல. அவற்றுள் சில சிதைந்துள்ளன. இதுவரையும் கூறியதிலிருந்து இந்தக் கோயிலைப்பற்றி மறைந்து போன எத்தனையோ பல செய்திகளை அறிந்துக் கொள்கிறோம்.