180 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14 |
இலை அமுது : (இது இலையமுது என்றும், வெற்றிலை அமுது என்றும் கூறப்படும்). ஒரு வேளைக்கு மூவடுக்காக நான்கு வேளைக்கு வெற்றிலை அமுது மூன்று பற்று”. அடைக்காயமுது : (பாக்கு அமுது). ஒரு வேளைக்குப் பதினான்கு. நான்கு வேளைக்கு அடைக்காயமுது ஐம்பத்தாறு. திருநந்தா விளக்கு : விளக்கு ஒன்றுக்கு உரிநெய். ஐந்து திருவிளக்குப் பசுவின் நறு நெய் நியதி இருநாழி உரி. திருமஞ்சனம்: (அபிஷேகம்) பசுவின்பால் நியதி (நாள் ஒன்றுக்கு) நானாழி, பசுவின் தயிர் நானாழி, இளநீர் வழுவை உட்பட நாழி இள நீருக்கு இள நீராக நியதி இள நீர் எட்டு. திருப்பள்ளித்தாமம்: பூமாலை, நாள் தோறும் அளக்கக்கடவ நறும்பூ பத்து நாழி. பயிற்றுப்பொரி: சிறுப்பயிற்றுப் பொரிக்காக நாழி உழக்கு. பற்று மஞ்சள்: திருமேனிபூசி அருளமேற்றோல் சிதைத்த பற்று மஞ்சள் நியதி உழக்கு. வெண்கூறை: (கூறை - ஆடை). மூன்று மாதத்துக்கு நான்கு இணை (ஜோடி)யாக ஓராண்டு நான்கு முறைக்கு வெண்கூறை பதினாறு இணை. மேற்கட்டிப் புடவை: திருமடைப்பள்ளிக்கு மேற்கட்டியாகப் புடவை (துணி) இரண்டு. ஆறு திங்களுக்கு ஈரிணை; ஓராண்டு இரண்டு முறைக்குப் புடவை நால் இணை. தூபம்: ஸ்ரீ தூபம் சீதாரியினுக்கு வேண்டும் உறுப்பு அகில் உட்படக் கற்பூரமும் தேனும் நியதி அரைக்காணம் விலைபெற இடுவது. மேற்கட்டு வெண்கூறை :- கர்ப்பக்கிருகத்துக்கு மேற்கட்டி வெண்கூறை (துணி) இரண்டு. ஆறு திங்களுக்கு நாலு இணையாக ஓராண்டு இரண்டு முறைக்கு வெண்கூறை எட்டு இணை, திருப்பலி : திருப்பல்லிக்குப் பசுவின் தோய் தயிர் நாள் ஒன்றுக்கு நாழி. |