பக்கம் எண் :

190மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

கோயில் தரையில் சிதறுவது கூடாது. இந்தச் செய்தியில் கோவிலுக்குச் சென்று வழிபடுவோர் கருத்தாக இருக்கவேண்டும். கோயிலுக்குச் சென்று வழிபடுவது எவ்வளவு புண்ணியச் செயலென்று கருதுகிறோமோ, அவ்வளவு புண்ணியமானது கோவிலில் குப்பைப் போடா திருப்பதும் என்பதை ஒவ்வொரு வரும் கருத்தில் வைக்க வேண்டும். இறைவன் எவ்வளவு புனிதமானவனோ அவ்வளவு புனிதமானது இறைவனின் கோயில் என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். *

அடிக்குறிப்புகள்

1. எண் 170, தென்னிந்தியக் கல்வெட்டுக்கள், தொகுதி, 13