பக்கம் எண் :

238மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

நந்திவர்மனின் 3-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இச் சாசனம், மீபுழை நாட்டு வடுவூர் கணவதிமான் என்பவர் 200 பேருக்குத் திருவாதிரையில் உணவு கொடுக்க நெல் தானம் செய்ததைக் கூறுகிறது.

சாசனம் வாசகம்2

1. ஸ்வஸ்தி ஸ்ரீ || கோநந்திப் போந்த
2. ரையர்க்கு யாண்டு 3-ஆவது மீ
3. புழை நாட்டு வடுவூர்க் கணவதிமா
4. ன்னாயின பகைச்சந்திர விசைஅ
5. ரையன் றிருவாதிரை நான்றுஅ
6. ட்டழிய வைத்த அரிசி 200 இரு
7. நூற்றுநாழி நூற்துவர்க்கு ||

3 - ஆம் ஆண்டு

தென் ஆர்க்காடு மாவட்டம், திண்டிவனம் தாலுகா, கிளியனூர் வைகுண்டவாசப் பெருமாள் கோயிலின் தென் புறச் சுவரில் உள்ள சாசனம் :

திகைத்திறல் கிராமத்தார், ஓய்மாநாட்டுக் கிளிஞெலூரில் திகைத்திறல் விஷ்ணுக்கிருகம் என்னும் கோயிலைக் கட்டி, விளக்குக் காக 300 ஆடும், திருவமுதுக்காக இரண்டு நிலமும் தானம் செய்ததைக் கூறுகிறது.

சாசன வாசகம்3

1. ஸ்வஸ்தி ஸ்ரீ || கோவிசைய நந்திவிக்கிரம பற்மக்கி யாண்டு
     மூன்றாவது ஓ
2. ய்மானாட்டு கிளிஞெலூர் திகைத்திறல் விஷ்ணுக்கிருகம்
     எடு
3. ப்பித்த திகை திறலார் திருவிளக்குக்கு வைத்த ஆடு
     முந்நூறும் இவரே திருவமு
4. துக்கு வைத்த ஸ்ரீ கோயிலின் கீழை செறுவிரண்டும்
     இறையிலி. இத்தன்மம் ரக்ஷித்தார் ஸ்ரீ பாதம் என்றலைய்
     மேலது.