பக்கம் எண் :

260மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

11. ஹம் சாசன
12. த்தா லுடையோ
13. ரும்...............
14. .......தளி
15. யிலாதாகி நின்ற பட்ட ரேன்மாவலியநி
16. யஸ்தாந மாள்வான் செ (வணற்குண்டு) கொ
17. ண்டு வந்து மடமுஞ் சுட்டுக் காத்த ஸிகுர
18. வரையு மெறிந்து இவர் ஸிஷ்யன் ஒரு பிரா
19. மணன் சத்திமுற்றத் தேவன் றுண்டுப
20. ட்டான் வல்லுவனாட் டான்.

விஜயநந்தி விக்கிரமவர்மனின் 21-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இன்னொரு சாசனம், சித்தூர் மாவட்டம் சந்திரகிரி தாலுகா, அவிலால கிராமத்துக் கபிலேசுவரர் கோவிலில் இருக்கிறது.32 இவ்வூர் ஏரியைச் செம்மையாக வைத்திருப்பதற்காகக் கல்லாணக்காணம், வீதநாழி என்னும் வரிப் பணத்தை விக்கிரமாதித்த மகாபலி வாணராயர் விட்டுக் கொடுத்ததை இச்சாசனம் கூறுகிறது. இவர் மனைவியார் அதிப்பிரசாதி என்னும் விஜ்ஜியக்கனார் என்பவர் வேண்டுகோளின்படி இந்த வரிப்பணம் கொடுக்கப்பட்டது. விக்கிரமாதித்த மகாபலிவாணராயர், நந்தி வர்மனின் கீழடங்கிய சிற்றரசர்.

22-ஆம் ஆண்டு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி தாலுகா திருப்பலாத்துறை (திருப்பிராய்த்துறை), ஆதி மூலேஸ்வரர் கோயில் மண்டபத்து வடபுறச் சுவரில் உள்ள சாசனம்.

இக்கோயிலுக்கு இரண்டு விளக்கெரிப்பதற்காக 60 கழஞ்சு பொன் தானம் செய்யப்பட்டதை இச்சாசனம் கூறுகிறது.

சாசன வாசகம்33

1. ஸ்வஸ்திஸ்ரீ
2. தெள்ளாற்றெறி
3. ந்த நந்திப்
4. போத்தரையர்
5. யாண்டு இருபத்