பக்கம் எண் :

266மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி என்னும் ஊரில் உள்ள சப்தரிஷீசுவரர் கோயிலில் இந்தச் சாசனம் இருக்கிறது. மாறஞ்சடைய னான வரகுண மகாராசன் இக் கோயிலுக்கு 120 பழம்பொற்காசு, கோயிலில் விளக்கு எரிப்பதற்காக வைத்த செய்தியை இச்சாசனம் கூறுகிறது. லால்குடியின் பழைய பெயர் திருவத்துறை என்பதும் சப்தரிஷீசுவரரின் பழைய பெயர் திருத்துறை மகாதேவர் என்பதும் இச்சாசனத்தினால் தெரிகின்றது :

சாசன வாசகம்41

1. ஸ்வஸ்திஸ்ரீ கோமாஞ்சடையர்க்கு யாண்டு 4 வதின் எதிர்
     9 ஆமாண்டு தனுநாயற்று செவ் வாக்கிழமை பெற்ற
     சதயம்த்து நாள் இ

2. டையாற்று நாட்டு திருத்தவத்துறை மஹா தேவர்க்கு
     இரவும் பகலும் சந்திராதித்தவல் இரண்டு நொ(ந்தா
     திருவிளக்கு)

3. எரிப்பதாக கோமாறஞ் சடையனாகின பாண்டிய குலபதி
     வரகுணமஹாராயர் அண்டநாட்டு வேளான் கையில்க்
     குடுத்த பழங்

4. காசு 120 நூற்றிருபது காசுங் முதல் கெடாமை
     பொலியூட்டினால் நிசதிநா............

5. அளப்போமானோம் இப்படி ஒட்டி இக்காசு கொண்டோம்
     இடையாற்று நாட்டு இளம் பெருங் காயிருக்கை சபையோ

6. ம் இஞ்ஞெய் நிசதி இருநாழியும் முட்டில் முட்டி ரட்டியும்
     மூலப்பட்ட பன்மஹேஸ்வரரே சபை யாகவும்
     தனித்தாகவும் நி......

7. ள்ளிட்ட தான் வேண்டு கோவினுக்கு புக்கவுள அஞ்ஞாற்று
     காணம் தண்டமிட ஒட்டிக் குடுத்தோம்
     திருத்தவத்துறை மஹாதேவர்க்கு.

4-ஆம் ஆண்டு

தஞ்சை மாவட்டம், தஞ்சை தாலுகா, தில்லஸ்தானத்து இருதயா லேசுவரர் கோவில் சாசனம்.