28 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14 |
ஆலயத்தின் வாயிலின் மேலே இரண்டாவது செய்யுள் எழுதப் பட்டிருக்கிறது. முதலாவது செய்யுளின் மேலே கீழ்கண்ட வாசகம் எழுதப் பட்டிருக்கிறது : “ஸ்வஸ்திஸ்ரீ. திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு 23-வது ஐயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற்கோட்டத்து மாகறல் நாட்டு மாகறல் திருமேற்கோயில் வீற்றிருந்த எம்பெருமான் கோவில் ஸ்ரீவிமானமும் திருவர்த்த மண்டபமும் திருமண்டபமும் சோபனமும் ஸ்ரீபீடமும் இவ்வூர் பட்டியர் போயன் மணியன் பெருங்கன் செய்வித்தான். ஹரி.” சாசனச்செய்யுள் திருமன்னு ஸ்ரீராச ராசற் கியாண்டு சென்ற விருபத்து மூன்றாவதிற் செந்தளிர் சூழ் மருமன்னும் பொழிற் றிருமாகறல் திருமேற்கோயில் மன்னிவீற் றிருந்த பெருமாளுக்கு மண்மேற் கருமன்னு சீவிமான மத்தமண்டப மேர்கலந்த மண்டபத்தோடு சோபானஞ் சீபீடந் தருமன்னுங் கொடைப்பட்டியர் போயன் மணியன் தரும்பெருங்கன் செய்வித்தான் தருமநிலைபெறவே. 1 சீராச ராசற் காண்டறிற் றென்மாகறற் பாரார்புக ழண்டம் பாக்கிழான் - காரார் தருப்போல் தருந்திருவன் காழன் முருகன் திருக்கோயில் செய்தான் சிறந்து. 2 திருமால் மாவலிவாணன் இடம் : செங்கற்பட்டு மாவட்டம், காஞ்சீபுரம் தாலுகா, காஞ்சீபுரம், ஏகாம்பர நாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், மேற்கு - தெற்குப்புறச் சுவர்களில் எழுதப்பட்டுள்ளவை. பதிப்பு : எண் 348 - A. தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு. (No. 348-A. S.I.I. Vol. IV.) |