தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் | 299 |
என்று நம்பப்படும். அவ்வாறே இன்றும் தொழப்படுகிறது. இந்தத் தேசத்தின் தெற்கில் கடலுக்கு அருகிலே மொலொய (மலைய) மலை இருந்தது. இம் மலையில் சந்தனமரம் கற்பூர மரம் முதலிய மரங்கள் இருந்தன. இதற்குக் கிழக்கில் பொடலக மலை இருந்தது. இதன் உயரமான உச்சியில் செல்லக் குறுகிய பாதை உள்ளதாயும் உச்சியில் தூயநீருள்ள ஏரியொன்று இருந்தது என்றும், அதிலிருந்து அருவியொன்று மலையை 20 தடவை சுற்றிக்கொண்டு கடலில் சென்று விழுந்தது என்றும் கூறப்படுகிறது.ஏரியின் கரையில் தேவாலயம் ஒன்று இருந்ததாகவும் அங்கு குவான் த்ஸுத்ஸாய் பூசா அடிக்கடி சென்றதாகவும் கூறப்படுகிறது. பூசாவைக் காண்பதற்கு அருவியையும் மலையையும் அரிதில் கடந்து அடியவர் சென்றார்களென்றும், ஆனால் சிலர் மட்டுந்தான் கோயிலுக்குச் செல்ல முடிந்ததென்றும் கூறப்படுகிறது. மலையடிவாரத்திலிருந்து பிரார்த்தனை செய்தால் பூசா, சில சமயம் பாசுபத தீர்த்தகரராகவும் சில சமயம் மகேசுவரராகவும் காட்சியளிக்கிறாராம். பொதலக மலைக்கு வடகிழக்கே கடற்கரையோரத்தில் ஒரு நகரம் உண்டு. இது செங்லொவுக்கு (சிங்களத்துக்கு) அடுத்துள்ள கடலில், இலங்கைக்குச் செல்லும் வழியில் இருக்கிறது. இங்கிருந்து இலங்கை 300-லீ தென்கிழக்கே உள்ளதென்று கூறுகிறார்கள்.”6 இதில் கூறப்பட்ட மலகூடம் என்பது மலையகூடப் பிரதேசமாகிய பாண்டிய நாடு. இந்த மலையகூட நாடு என்று சீன யாத்திரிகர் கூறுவது, கிழக்கே தஞ்சாவூர் மதுரை மாவட்டங்களையும், மேற்கே கோயம்புத்தூர் கொச்சி திருவாங்கூர் பிரதேசங்களையும் கொண்டது என்று கன்னிங்காம் கூறுகிறார்.7 அடிக்குறிப்புகள் 1. On Yuan chuang’s Travels in India By Thomas watters, Vol. II, P. 224 -225. 2. Ancient geography of India by General Cunningham, p. 545. 3. P. 226. on Yuan Chwang’s Travels in India by Thomas Watters, Vol II. 4. P. 548. Ancient geography of India by General Cunningham. 5. சீல பத்திரர் என்பவர் நளாந்தைப் பல்கலைக்கழகத்தில் இருந்த பேராசிரியர். இவர் சீனயாத்திரிகரான யுவான் சுவாங்குக்கு வடமொழி கற்பித்த ஆசிரியர். 6. P. 228 - 299. on yuan chwang’s Travels in INdia by Tomas watters, Vol.II. 7. P. 549. Ancient geography of India by General Gunningham. |