பக்கம் எண் :

150மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15

நோயும் போல்வர் நுகர்தற் கருமையால்
வேயும் போல்வரிவ் வேனெடுங் கண்ணினார்.     2

தோளும் மென்முலை யும்மல்குற் பாரமும்
நாளும் நாளும் நவின்று பருகிய
கேள்வன் மார்க்கும் பகைஞர்க்கு மொத்தலால்
வாளும் போல்வரிவ் வேனெடுங் கண்ணினார்.     3

தானத்துக் குரித்து மன்று தன்கிளைக் கீயிற் சால
ஈனத்தில் உய்க்கும் நிற்கும் எச்சத்தை யிகழப் பண்ணும்
மானத்தை யழிக்கும் துய்க்கின் மற்றவர்க் கடிமை யாக்கும்
ஊனத்து நரகத் துய்க்கும் பிறர்பொருள் உவக்கில் வேந்தே.      4

கிளருமெரி விடமெழுதல் விழுதல்முத லாய
அளவிலகு நரகில்வரு நவைபலவு மஞ்சின்
உளமொழிமெய் நெறியொழுகி யுறுபொருள் சிதைக்கும்
களவுவிழை வொழிதல்கட னாக்கனனி நன்றே.     5

பிளவுகெழு வெழுநரக மெரிகொளுவ லீர்தல்
இளையவுடல் தடிவொடுறு துயரம்விளை விக்கும்
கிளையறவு தருமரிய புகழினை யழிக்குங்
களவுநனி விடுதலற மென்றுகரு தென்றான்.     6

கனிந்தநெய்க் கவளங் கையில் வைத்துடன் கழறு வாரை
முனிந்திடு களிறு போல்வார் முத்தியை விளக்கு நீரார்
மனங்கொளத் துறந்திடாதே வால்குழைத் தெச்சிற் கோடும்
சுணங்கனைப் போலும் நீரார் பற்றிடைச் சுழலும் நீரார்.     7

ஆனை யூற்றின் மீன்சுவையின்
     அசுண மிசையின் அளிநாற்றத்
தேனைப் பதங்க முருவங்கண்
     டிடுக்க ணெய்து மிவையெல்லாம்
கான மயிலின் சாயலார்
     காட்டிக் கௌவை விளைத்தலான்
மான மாந்தர் எவன்கொலோ
     வரையா தவரை வைப்பதே.     8

விண்ணில் இன்பமும் வீதல் கேட்டுமால்
மண்ணில் இன்பமும் மாய்தல் காண்டுமால்