மறைந்துபோன தமிழ் நூல்கள் | 197 |
“கடைச்சங்க மிரீஇய பாண்டியருள் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணனார் செய்த முதனூல்களிலுள்ள வசைக்கூத்திற்கு மறுதலை யாகிய புகழ்க்கூத்தியன்ற மதிவாணர் நாடகத்தமிழ் நூல். என்று எழுதுகிறார். எனவே. இது கடைச்சங்க காலத்தில் இயற்றப் பட்ட நூலாகும். அடியார்க்கு நல்லார் தமது உரையிலே இந்நாடகத்தமிழ் நூலி லிருந்து சில சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறார். அவை வருமாறு: “அவைதாம் ‘நாடகம் பிரகரணப் பிரகரணம் ஆடிய பிரகரணம் அங்கம் என்றே ஒதுப நன்னூல் உணர்ந்திசி னோரே’ என்றார் மதிவாணரும்.” (சிலம்பு., அரங்கேற்று காதை, 13ஆவதுவரி, உரை மேற்கோள்) “முன்னிய வெழினிதான் மூன்று வகைப்படும்” என்றார் மதிவாணனார்.” (சிலம்பு., அரங்கேற்றுகாதை, 109ஆம் வரி, உரை மேற்கோள்) “பூராடங் கார்த்திகை பூரம் பரணிகலஞ் சீரா திரையவிட்டஞ் சித்திரையோ - டாருமுற மாசி யிடப மரிதுலை வான்கடகம் பேசிய தேள்மிதுளம் பேசு’ என்றார் மதிவாணனாரும்.” (சிலம்பு., அரங்கு, 123ஆம் வரி உரை மேற்கோள்) “திருவள ரரங்கிற் சென்றினை தேறிப் பரவுந் தேவரைப் பரவுங் காலை மணிதிகழ் நெடுமுடி மாணிபத் திரனை யணிதிகழ் பளிங்கி னொளியினை யென்றுங் கருந்தா துடுத்த கடவுளை யென்றும் இரும்பனைத் தனிக்கொடி யேந்தினை யென்றும் கொடுவாய் நாஞ்சிற் படையோ யென்றும் கடிமலர் பிணைந்த கண்ணியை யென்றும் சேவடி போற்றிற் சிலபல வாயினும் மூவடி முக்கால் வெள்ளையின் மொழிப’ என்றார் மதிவாணனாரென்க.” (சிலம்பு., கடலாடு., 35ஆம் வரி, உரை மேற்கோள்) |