| 268 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
மூவடி முதலா முறைசிறந் தேறித் தொள்ளா யிரத்துத் தொண்ணூற் றெண்ணிரண் டெய்து மென்ப வியல்புணர்ந்த தோரே. 2 வஞ்சி தானே யடிவரம் பின்றி யெஞ்சா விசைநிலை தூங்க லெய்தியும் ஆசிரிய மாகியு முடியு மென்ப. 3 செப்ப லோசையிற் சீர்தளை சிதையாது மெய்ப்படக் கிளந்த வெண்பா விரிப்பிற் குறணேர் நெடிலென மூன்றா யவற்றின் இறுதி வடியே முச்சீர்த் தாகி யதனீ றசைச்சீ ரெய்தி யடிவகை யோரிரண்டு முதலா முறைசிறந் தீரா றேறு மென்ப வியல்புணர்ந் தோரே.” 4 (யாப்பருங்கலம், அடியோத்து - 10. உரைமேற்கோள்.) “‘அவைதாம், முதலோ டயல்கொள்வ திணையய லின்றி மூன்றாஞ் சீரது பொழிப்பிரண் டிடையிட் டிறுதியொடு கொள்வ தொரூஉ விறுதிச் சீரொழித் தேனைய தொன்றிற் கூழை முதலீ றடைந்தவற் றின்மை யிருவகைக் கதுவாய் முற்று நிகழ்வது முற்றே முதலோடெட் டாகு மென்மனார் புலவர்’ 5 என்றார் பரிமாணனார். அவர் இயைபுத் தொடைக்கு விகற்பம் வேண்டிற்றிலர். என்னை? ‘செந்தொடை யியைபிவை யல்லா நான்கு முதற்சீ ரடியால் விகற்பங் கொள்ப’ 6 என்றாராகலின்.” “அடிமுழு தொருசீர் வரினஃ திரட்டை.” (யாப்பருங்கலம், தொடையோத்து, 17, உரை மேற்கோள்) மயிலைநாதர், தாம் எழுதிய நன்னூல் உரையில் (பொதுவியல், 51ஆம் சூத்திரம்) பரிமாணனார் சூத்திரம் ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளார். |