28 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
கொங்கை யரும்பாக் குழலளகம் வண்டாக அங்கை தளிரா வலர்விழியாத் - திங்கள் குளிருந் தரளக் குடைக் கண்டன் கொல்லி யொளிதருங் கொம்பொன் றளது. 1 குழைமுகத்தாற் கொங்கை மலையு மருங்கால் விழியரிய நாட்டத்தால் வேனற்-பொழிலெல்லாம் புல்லார்ப் புறங்கண்ட கண்டன் புகாரனைய நல்லாளே யாகு நமக்கு. 2 கண்டு நிலைதளர்ந்தேன் காத்தருளுங் கார்வரைமேற் புண்டரிகம் வைத்தான் புகாரனையீர்-வண்டின் கிளையலம்பு கார்நீழற் கெண்டைமேல் வைத்த வளையலம்பு செந்தா மரை. 3 சீத விரைக்களபச் செந்தா மரைப்பொகுட்டு மாதனையீ ரம்போடு வந்ததோ-சோதிப் பொருதாரை வேற்கண்டன் பூபால தீபன் கருதாரி னிங்கோர் களிறு. 4 குருகு பெடையென்று கோலப் பணிலத் தருகணையும் பூங்காவிற் றாகு-முருகவிழும் பூந்தண்டார்க் கண்டன் புனனாட் டுயர்செல்வ யாந்தண்டா வாழு மிடம். 5 போகக் கடவன புள்ளென் றிருந்திலம் போந்துதுணை யாகக் கடவன வென்றிருந் தேமகி லாண்டமெல்லாந் தியாகக் கொடிகொண்ட கண்டன் புகாரிற்றஞ் சேக்கைதொறு மேகத் தொடங்கின வேயந்தி வாயெம்மை யிட்டுவைத்தே. 6 ஊச றொழிலிழக்கு மொப்பு மயிலிழக்கும் வாசந் தனையிழக்கும் வள்ளலே-தேசு பொழிலிழக்கும் நாளையே பூங்குழலி நீங்க எழிலிழக்கு மந்தோ விதண். 7 பொன்னிதழிற் பைந்தாதும் போதும் புறம்புதைத்த வின்னறல்போ லேழை யிருங்கூந்தல்-பொன்னணியுந் தேன்சூழுந் தார்க்கண்டன் றெவ்விற் றிகைத்தன்ப யான்சூழ வுண்டோ வினி. 8 |