மறைந்துபோன தமிழ் நூல்கள் | 281 |
33. பாட்டியல் மரபு இந்த யாப்பிலக்கண நூலை, யாப்பருங்கல விருத்தியுரைகாரர் தமது உரையில் குறிப்பிடுகிறார். இந்நூலாசிரியர் யார், இது எந்தக் காலத்தில் இயற்றப்பட்டது என்பன தெரியவில்லை. இதற்குப் பாட்டியல் என்றும் பெயர் உண்டு. யாப்பருங்கல உரையாசிரியர் கீழ்க்காணும் சூத்திரங்களை இந்நூலிலிருந்து மேற்கோள் காட்டுகிறார்:- “ஆரிடமென்பது உலகியற் செய்யுள்கட்கோதிய உறுப்புகளின் மிக்கும் குறைந்தும் கிடப்பன எனக் கொள்க. அவ் வாரிடச் செய்யுள் பாடுதற்குரியார் ஆக்குதற்கும் கெடுத்தற்கும் ஆற்றலுடையராகி இம்மை மறுமை முக்காலப் பண்பு முணர்ந்த விருடிகளெனக் கொள்க. என்னை? ‘உலகியற் செய்யுட் கோதிய வளவியற் குறையவும் விதப்பவுங் குறையா வாற்றல் இருடிகள் மொழிதலின் ஆரிட மென்ப’ எனவும், ‘ஆரிடச் செய்யுள் பாடுதற்குரியோர் கற்றோ ரறியா வறிவுமிக் குடையோர் மூவகைக் காலப் பண்புமுறை யுணரும் ஆற்றல் சான்ற வருந்தவத் தோரே’ எனவும் சொன்னார் பாட்டியன் மரபுடையாராகலின்.” “மனத்தது பாடு மாண்பி னோருஞ் சினத்திற் கெடப்பாடுஞ் செவ்வி யோரு முனிக்கணச் செய்யுண் மொழியவும் பெறுப என்பது பாட்டியன் மரபு ஆகலின்” (யாப்பருங்கலம், செய்யுளியல் 40-ஆம் சூத்திர உரை மேற்கோள்) “நான்கடி யொத்து வருவனவும், நான்கடியு மொவ்வாது வருவன வும், இரண்டடி யொத்து நான்கடியால் வருவனவும், பிற வற்றால் வருவனவும், மாராச்சையும் மாராச்சாக்கிருதியும் முதலாகிய சாதியும் ஆரிடமும் பிரத்தார முதலாய ஆறு பிரத்தியமும் ... ... ... பாட்டியன்மரபு, பூதபுராண முதலாகிய தமிழ்நூலுள்ளும் பகுதி யுடையார் வாய்க் கேட்டுக் கொள்க. அவை யீரண்டுரைக்கிற் பெருகும்.” (யாப்பருங்கலம், ஒழிபியல், விருத்தியுரை) |