| 48 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
27. பொருளியல் அகப்பொருளைக் கூறும் இந்நூற் செய்யுள்கள் களவியற் காரிகை யுரையாசிரியரால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இந்நூலை இயற்றிய ஆசிரியர் பெயர் முதலியன தெரியவில்லை. இந்நூற் செய்யுள்கள் சிலவற்றைக் கீழே தருகிறோம்: நோக்கினும் பிறர்முக நோக்காள் சாரினும் பூக்குழன் மடந்தை தோள்சா ரும்மே யன்ன தலையளி யுடைமையி னின்னுயிர்த் தோழி யேந்திழை யிவட்கே. 1 உடையை வாழி நெஞ்சே யிடைக்கொண் டழுங்க லோம்புமதி தழங்கொலி மிகுநீர் வழுத்தூர் காக்கு மாபுணை விழுத்துணைக் கான்ற மிகுபெருங் கிளையே. 2 பொருந்தா தம்ம புனையிழை மடந்தை முருந்தேர் முறுவ னோக்கிள் வருந்தின னென்பது பெருந்தகை பெரிதே, 3 ஆய்தளிர் பொதுளிய வீததை காய்கதிர் நுழையாக் கடிபொழில் யாவயி னோரும் விழைவுறுந் தகைத்தே. 4 தனிமை நெஞ்சத்து முனிவுகண் டகற்றலின் வினைமாண் பாவை யன்ன புனையிழை மாதரும் போன்றதிப் பொழிலே. 5 தெய்வ மாக வையுறு நெஞ்சம் பொய்யா தாயினின் செவ்வாய் திறந்து கிளிபுரை கிளவியாம் பெறுக வொளியிழை மடந்தை யுயிர்பெயர்ப் பரிதே. 6 காவியங் கருங்கட் செவ்வாய்ப் பைந்தொடி பூவிரிந் தன்ன கூந்தலும் வேய்புரை தோளு மணங்குமா லெம்மே. 7 |