ஆண்டு | பெயர் முதலியன |
1831 | “தமிழ்ப் பத்திரிகை”: திங்கள் இதழ். கிறிஸ்து சமயப் பத்திரிகை “மதராஸ் ரிலிஜியஸ் டிராக்ட் ஸொஸைடி” யால் சென்னையில் அச்சிடப்பட்டது. கிறிஸ்துமத சம்மந்தமான கட்டுரைகள் இதில் எழுதப்பட்டன. தமிழில் முதல் முதல் வெளிவந்த பத்திரிகை இதுவே. அடிக்கடி ஆசிரியர்கள் மாறிய படியால் வெளிவருவதில் தவக்கம் ஏற்பட்டது. |
1840 | பாலதீபிகை: சிறுவர்களுக்கான பத்திரிகை. மூன்று மாதத்துக் கொருமுறை நாகர் கோவிலிலிருந்து வெளிவந்தது. 1852 வரையில் நடந்தது. |
1740 | Missionay Gleance இந்தக் கிறிஸ்துவத் தமிழ்ப் பத்திரிகை நாகர் கோவிலிலிருந்து வெளிவந்தது. பல ஆண்டுகள் நடைபெற்றது. |
1840 | Friendly Instructor: இந்தக் கிறிஸ்துவத் தமிழ்ப் பத்திரிகை பாளையங் கோட்டையிலிருந்து வெளிவந்தது. |
1840 | தற்போதகம்: பாளையங்கோட்டை சர்ச்சு மிஷன் அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. பல ஆண்டுகள் நடைபெற்றது. |
1841 | ஜனசிநேகன்: சென்னையிலிருந்து வெளிவந்து. மாதம் இருமுறை |
1841 | சுவிசேஷ பிரபாவ விளக்கம்: நாகர் கோவிலிலிருந்து வெளி வந்தது. |
1842 | The Aurora: மாதம் இரு முறை வெளிவந்த தமிழ்ப் பத்திரிகை. |
1845 | உதய தாரகை: இலக்கியம், கல்வி, சமயம் முதலியவற்றைப் பற்றிய கட்டுரைகள் இதில் வெளிவந்தன. தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டன. |
1849 | சிறுபிள்ளையின் தேசத் தோழன்: மூன்று மாதத்துக் கொருமுறை நாகர் கோவிலிலிருந்து வெளிவந்தது. |