பக்கம் எண் :

122மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16

1886 லோக ரஞ்சனி: திங்கள் இதழ். T. நாதமுனி நாயுடு இதன் ஆசிரியர். பல்லாரி கௌல் பஜார் நியூட்ரல் அச்சு யந்திர சாலையில் அச்சிடப்பட்டது.

1887 ஜனோபகாரம்: இதன் விபரம் தெரியவில்லை.

1887 மாதர் மித்திரி: சென்னையில் வெளியிடப்பட்டது.

1887 சிங்கை நேசன்: சிங்கப்பூரிலிருந்து வெளிவந்தது. 1890 வரையில் நடைபெற்றது.

1887 விவேக போதினி: திங்கள் இதழ். சென்னை ரிப்பன் யந்திர சாலையில் எ.எல்.இராசு செட்டியாரால் வெளியிடப்பட்டது.

1887 லோக ரஞ்சினி: திங்கள் இதழ். வேலூரிலிருந்து சி. ஜி. அப்பு முதலி என்பவர் இதனை வெளியிட்டார்.

1887 திராவிட ரஞ்சினி: திங்கள் இதழ். திருச்சியிலிருந்து வெளி வந்தது. டி. வி. வெங்கடராசு நாயுடு இதன் ஆசிரியர்.

1887 விவேக சுந்தரம்: திங்கள் இதழ். சென்னை ரிப்பன் அச்சு யந்திர சாலையில் அச்சிடப்பட்டு எஸ். நமசிவாய செட்டியாரால் வெளியிடப்பட்டது.

1887 ஜனோபகாரம்: திங்கள் இதழ். சென்னை ரிப்பன் அச்சு யந்திர சாலையில் அச்சிடப்பட்டு, சி. சடையாண்டி செட்டியாரால் வெளியிடப்பட்டது.

1887 மகாராணி: திங்கள் இதழ். மகளிருக்காக வெளியிடப் பட்டது. சென்னை வி. என். ஜுபிலி அச்சகத்தில் அச்சிடப்பட்டது.
வி. கிருஷ்ண மாச்சாரியார் இதன் ஆசிரியர்.

1887 கிராமப் பள்ளி ஆசிரியன்: திங்கள் இதழ். கோபாலையர் இதன் ஆசிரியர். சென்னை அல்பினியன் அச்சகத்தில் அச்சிடப்பட்டது.

1887 உலக நேசன்: பினாங்கிலிருந்து வெளிவந்தது. முகமதியாரால் அச்சிடப்பட்டது.

1888 பினாங்கு விஜயகேதனன்: திங்கள் இதழ். பினாங்கிலிருந்து வெளி வந்தது. 1899 வரையில் நடந்தது.