பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு191

ஆத்திப்பட்டிச் சங்கிலி வீரப்ப பாண்டிய வன்னியனார்மீது பள்ளு, புரவிபாளையம் பெருநிலக்கீழார்மீது விசயக்கும்மி, கருங்காலக் குடி காதல், குறவஞ்சி, கும்மிப்பதம், இசைப்பாடல்கள் முதலியன.

அரங்கநாத முதலியார் (1837-1893)

ராய்பகதூர், பூண்டி அரங்கநாத முதலியார் என்பது இவர் பெயர். சென்னை மாகாணக் கல்லூரியில் கணிதப் பேராசிரியராக இருந்தவர். கணிதத்துடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் வல்லவர். கம்ப இராமா யணத்தையும் திருவிளையாடற் புராணத்தையும் மனப்படாமாக ஒப்பிப்பார். 1880-இல் அரசாங்க மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப் பட்டார். 1892-இல் சென்னை நகர ஷெரீப்பாக நியமிக்கப் பட்டார். கச்சிக் கலம்பகம் என்னும் செய்யுள் நூலை இயற்றி 1889-இல் சென்னைத் தொண்டை மண்டலம் துளுவ வேளாளர் பாடசாலையில் அரங்கேற்றினார். டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்களுக்கு இவர் பலவகையில் உதவி செய்தார். இவருடைய உருவச்சிலை சென்னை மாகாணக் கல்லூரியில் இருக்கிறது.

சபாபதி முதலியார் (1837-1898)

மகாவித்துவான் சு. சபாபதி முதலியார் என்பது இவர் பெயர். இவர் ஊர் மதுரை. தமிழ் வடமொழி, ஆங்கிலம் என்னும் மும்மொழி களைக் கற்றவர். கணித நூல் வல்லவர். மதுரைக் கலாசாலையில் தமிழ் ஆசிரியராக இருந்து 1880-ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். பரிதிமாற் கலைஞன் என்னும் வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் இவரிடம் கல்வி பயின்ற மாணவர்களில் ஒருவர்.

இவர் இயற்றிய நூல்கள்: திருப்பரங்கிரிக் குமரன் அந்தாதி, திருக்குளத்தை வடிவேலன் பிள்ளைத் தமிழ், மதுரைமாலை முதலியன. குளந்தை என்பது மதுரையைச் சேர்ந்த பெரிய குளம். இவ்வூரார் வேண்டு கோளின்படி குளந்தை வடிவேலன் பிள்ளைத் தமிழை 1863-இல் இயற்றினார். இந்நூல் 1896-இல் அச்சிடப்பட்டது.

இவர் காலஞ்சென்றபோது இவருடைய மாணாக்கராகிய பரிதிமாற்கலைஞன் அவர்கள் கூறிய இரங்கற்பாக்கள் இவை: சரபம், சரபகவி வித்துவான் என்னும் சிறப்புப் பெயர்களை யுடையவர்.

இவர் இயற்றிய நூல்கள்: தில்லைத் திருவாயிரம், திருவரங்கத் திருவாயிரம், ஏழாயிரப் பிரபந்தம், நான்கு நூல், திருமகளந்தாதி, ஏகபாதத்திகழகலந்தாதி, தெய்வத்திருவாயிரம், பழநித்திருவாயிரம்,