238 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16 |
கையெழுத்துப் புத்தகசாலையில் இருக்கிறது. இந்நூலுக்குப் பத்துப் பேர் பாயிரம் பாடியுள்ளனர். அவர்கள்: தாண்டவராயக் கவிராயர், இராமச்சந்திர கவிராயர், நயினியப்ப கவிராயர், வீராசாமி முதலியார், வேங்கடாசல முதலியார், சாம்பசிவக் கவி, கூனிபோகு ராமசாமி, அருணாசல உபாத்தியாயர், இராமநுசக் கவிராயர், வாலைதான் என்பவர். இவர்கள் 19-ஆம் நூற்றாண்டில் இருந்தவர்கள். முத்துக்குமாரத் தம்பிரான் சென்னையைச் சேர்ந்த மயிலாப்பூரில் பிறந்தவர் இவர். வீர சைவ மரபினர். இவருடைய இயற்பெயர் வீரபத்திர ஐயர் என்பது. திருப்போரூர்த் திருக்குளத்துக்கு நீராழி மண்டபம் கட்டினார். திருப்போரூர்த் திருக்கோவிலை வளப்படுத்திப் பல திருப்பணிகளைச் செய்தார். திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் ஆதீனத்தில் ஒன்பதாவது மடாதிபதியாகப் பட்டங்கட்டப் பெற்று முத்துக் குமாரத் தம்பிரான் என்று பெயர் பெற்று விளங்கினார். புரசை அட்டாவதனம் சபாபதி முதலியாரின் நண்பர். இவர் இயற்றிய நூல்கள்: சமரபுரிமாலை, திருப்போரூர் அந்தாதி, திருப்போரூர் வெண்பா திருப்போரூர் கலித்துறையந்தாதி, பிரணவ சைவமாலை, பூசாவிதி அகவல், யுத்தபுரிமாலை. பல இசைப் பாடல்ளையும் இயற்றியுள்ளார். முத்து வீர உபாத்தியாயர் உறையூர் வித்துவான் முத்துவீர உபாத்தியாயர் என்பது இவர் பெயர். திரிசிரபுரத்தில் இருந்தவர். இறுதிக் காலத்தில் சென்னையில் இருந்தார். திருநெல்வேலியில் இருந்த சுப்பிரமணிய தேசிகர் என்னும் இலக்கணப் புலவரின் வேண்டுகோளின்படி இவர் தம் பெயரினால் முத்து வீரியம் என்னும் இலக்கண நூலை இயற்றினார். இது எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து இலக்கணங்களும் பொருந்திய சூத்திர யாப்பினால் ஆன நூல். திருநெல்வேலி மகாவித்துவான் திருப்பாற் கடல்நாதன் கவிராயர் இந்த இலக்கண நூலுக்கு உரை எழுதினார். இந்நூலின் எழுத்து, சொல் என்னும் இரண்டு அதிகாரங்களை மட்டும் டிபுடி கலெக்டராக இருந்த பட்டாபிராமன் பிள்ளையவர்கள் |