தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு | 241 |
“உலகு மேதகு மிவனெனக் கொருமுத லெனக்கொண் டிலகவா ழருளிடத் தனாமீசனை யிறைஞ்சிக் குலவுநூற் பொருளுணர்த்திய குரவனைப் பழிச்சி யலகில் சீரெழுத் தாதியைந் தறைகுவ னமைந்தே!” பாலபோத இலக்கணம் எழுதி 1852-இல் அச்சிற் பதிப்பித்தார். கல்விப்பயன், யாப்பிலக்கண வினா விடை. அணியிலக்கண வினா விடை ஆகிய நூல்களை எழுதினார். திருக்கோவையாருக்கு உரை எழுதி 1897-இல் அச்சிட்டார். நன்னூலுக்குக் காண்டிகையுரை எழுதி 1875-இல் அச்சிட்டார். இவ்வுரை 1882-லும் பதிப்பிக்கப்பட்டது. வீரராகவ முதலியார் முத்தமிழ்க் கவி வீரராகவ முதலியார் என்பது இவர் பெயர். அந்தகக் கவி வீரராகவ முதலியார் இவரின் வேறானவர். அந்தக் கவி இவருக்கு முற்பட்ட காலத்தவர். இவர் 19-ஆம் நூற்றாண்டில் இருந்தவர். இருவரும் தொண்டை நாட்டுப் பொன் விளைந்த களத் தூரில் பிறந்தவர்கள். முத்தமிழ்க்கவி வீரராகவ முதலியார் வைணவ சமயத்தவர். இவர் இயற்றிய நூல்கள் திருவேங்கடக் கலம்பகம், திருக்கண்ணமங்கை மாலை, திருவேங்கடமுடையான் பஞ்சரத்தினம், வரதராசர் பஞ்சரத்தினம், பெருந்தேவியார் பஞ்சரத்தினம். வீராசாமி செட்டியார் அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் என்பது இவர் பெயர். சென்னை சர்வ கலாசாலையில் தலைமைத் தமிழ்ப் புலவராக இருந்தவர். தினவர்த்தமானி என்னும் பத்திரிகையில் தாம் அவ்வப் போது எழுதி வெளியிட்ட கட்டுரைகளைத் தொகுத்து ‘விநோத ரச மஞ்சரி’ என்னும் பெயருடன் வெளியிட்டார் (1891). இவருடைய மாணவர் விஷ்ணுதாசர் என்னும் அப்பாவுப்பிள்ளை. அப்பாவுப் பிள்ளை ஸ்ரீ பெரும்பூதூர் உடையவர் பஞ்சரத்தினம் என்னும் நூலை இயற்றினார். வீராசாமி செட்டியார் அகராதி தொகுப்பு வேலையில் இருந்தார். அப்போது அவருடன் இருந்து அலுவல் செய்தவர், யாழ்ப்பாணத்து அளவெட்டி யூரினராகிய கனகசபைப் புலவர் என்பவர். வீராசாமி செட்டியாருடைய நரைத்த குடுமியைப் பாடும்படி ஒரு நண்பர் கனகசபைப் புலவரைக் கேட்க அவர் ஒரு செய்யுள் பாடினார். அச்செய்யுள் இது: |