தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு | 289 |
நீதிநூல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் இயற்றிய நீதிநூலுக்குத் திருத்தணிகை விசாகப் பெருமாளையரவர்களியற்றிய சாற்றுக் கவி. இச்சாற்றுக் கவி 1892-ஆம் ஆண்டு ச. ஞானப்பிரகாசம் பிள்ளையவர்களால் அச்சிடப்பட்ட நீதிநூல் மூலமும் உரையும் என்னும் புத்தகத்தில் உள்ளது. நிலமண்டில வாசிரியப்பா முதனடு வீறிலா முனைவன் படைத்த நதிபதி யுடுத்த ஞாலத் துறைவோர் பெறுதற் குரிய பெரும்பய னிவை யென் றறைதரு சுருதி மிருதி யாதிய வெண்மை யன்றுணர்வ தெனமுனி வரரு 5 முண்மைவள் ளுவரு முற்றியுள் ளிரங்கு பறமுன் முப்பா லாகவப் பொருளைத் திறனுறத் தமிழிற் றெள்ளிதின் வகுத்த மாண்பமை நூலொடு சங்க மரீஇய வேண்கொ ணாவலர்க ளியாத்த பன்னூலு 10 நன்கினி தாய்ந்து நயந்தெரிந் தெவர்க்கு மங்கையிற் கனிபோ லையந்திரி பொரீஇப் புலப்படச் சொற்சுவை பொருட்சுவை பொதுள விலக்கணக் கவிஞரி யாவரும் வியந்து முடிதுளக் குறுவான் கடிகமழ் தேறலுங் 15 கன்னலு மமுதுங் கலந்து குழைத்தாங் கின்னிசை தமீஇய பன்னருஞ் சிறப்பி னணிகெழு செய்யுளான் மணிவட மேய்ப்பச் சால்புடை நீதி நூலொன் றியற்றின னளந்தறி வொண்ணா வலங்குழூஉ வுற்ற 20 தாடக வுலகெனு மதுபட் டாங்குகொ னாடுது மென்னா வோடி நிமிர்ந்தென வுயர்வற வுயர்ந்த புயறவழ் குடுமிப் பொன்மா ணெயிலும் பன்மா ளிகையும் விளங்கிச் செறிந்த குளந்ததைக் கிறைவன் 25 பவந்தெறு கங்கா குலபரி பாலன் |