பக்கம் எண் :

88மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 17

விமரிசையையும், கரை காணாத கருணையையுங் கண்டுபிடித்துச் சகலத்தையும் உண்டாக்கி நடத்திக்கொண்டு வருகிற கர்த்தனை அகோராத்திரம் இடைவிடாமற் கொண்டாடுகிறதுக்கும் அவர் பேரிலே குறையற்ற பக்தியை வைக்கிறதற்கும் அவருடைய சித்தத்தின்படியே குறையற்ற பிரகாரமாய் மனுஷன் நடக்க முழுமனதோடு துணிகிற தற்கும் முன் சொல்லப்பட்ட பொருட்களுடைய வேடிக்கையுள்ள தெரிசனமானது பரிபூரண காரணமா யிருந்ததென்று அங்கீகரிக்கக் கடவோம். ”

ஞானோபதேச காண்டம். இரண்டாங் காண்டம்,

எட்டாம் பாடம்.

அடிக்குறிப்புகள்

1. நன்மை - Virtue

2. அனுரூப காரணம் - அக்கினி, அக்கினியையும், சிங்கம் சிங்கத்தையும் பிறப்பிப்பது போன்றது.

3. அனுரூப காரியம் - காரணத்துக்குள்ள குணமெல்லாம் கொண்டிருப்பது