தமிழ் இலக்கிய வரலாறு - கிறித்துவமும் தமிழும் | 91 |
வேறுபாடு அறிவதற்காக, எகர ஒகரங்களின்மேல் புள்ளி வைத்தும் ஏகர ஓகார நெட்டெழுத்துக்களின்மேல் புள்ளி வையாமலும் எழுதி வந்தனர். (உதாரணம், எ, ஒ, கெ, கொ இவை குற்றெழுத்துக்கள் ஏ, ஓ, கே, கோ இவை நெட்டெழுத்துக்கள் “மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல்” “எகர ஒகரத் தியற்கையு மற்றே” (தொல். எழுத்து. சூத்திரம் 15,16) “எகர ஒகர மெய்யிற் புள்ளி மேவும்” (வீரசோழியம், சூத்திரம் 6) “தொல்லை வடிவின எல்லா வெழுத்துமாண் டெய்து மெகர மொகர மெய்புள்ளி” (நன்னூல், எழுத்து 43) தொன்றுதொட்டு வழங்கிவந்த இந்தப் பழையமுறையை வீரமாமுனிவர் மாற்றிப் புது விதியை அறிமுகப்படுத்தினார். அது எகர ஒகரக் குற்றெழுத்தின்மேல் நீண்ட புள்ளியும், மெய் எழுத்துக் களின்மேல் சுழித்த புள்ளியும் வைக்கவேண்டும் என்பதே. இதற்கு இவர் கூறிய அச் சூத்திரம் வருமாறு: “நீட்டல் சுழித்தல் குறின் மெய்க் கிருபுள்ளி” (வீரமாமுனிவர் இயற்றிய “தொன்னூல் விளக்கம்.”) (உ-ம்:) எரி, ஒதி; மண, கண இவர் இயற்றியமைத்த இவ்விதியைப் பின்பற்றியே 19-ஆம் நூற்றாண்டில் சில அச்சுப்புத்தகங்கள் நீண்ட புள்ளியும் சுழித்த புள்ளியும் அமைத்து அச்சிடப்பட்டன. ஆனால், இக்காலத்தில் எகர ஒகரக் குற்றெழுத்துக்கள், வீரமாமுனிவரின் தொன்னூல்விளக்கத்தில் கூறியபடி நீண்ட புள்ளி பெறாமலும், நன்னூல் முதலிய பண்டைக்கால இலக்கணங்களின்படி சுழித்த புள்ளி பெறாமலும் எழுதப்பெறுவதோடு, ஏகார ஓகார நெட்டெழுத்துக்கள் முறையே நீண்ட புள்ளியும், சுழித்த புள்ளியும் கீழே அமைக்கப்பட்டு எழுதப்படுகின்றன. இந்த மாறுதல் யாரால் எப்பொழுது உண்டாக்கப்பட்டதென்று தெரியவில்லை. |