பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - கிறித்துவமும் தமிழும்95

கடவுள் வாழ்த்து

கார்த்திரள் மறையாக் கடலினுண் மூழ்காக்
     கடையிலா தொளிர்பரஞ் சுடரே
நீர்த்திரள் சுருட்டி மாறலை யின்றி
     நிலைபெறுஞ் செல்வநற் கடலே
போர்த்திரள் பொருதக் கதுவிடா வரணே
     பூவனந் தாங்கிய பொறையே
சூர்த்திரள் பயக்கு நோய்த்திரள் துடைத்துத்
     துகடுடைத் துயிர்தரு மமுதே.

தேறுந் தயையின் முனிவோய் நீ
     சினத்திற் கருள்செய் கனிவோய் நீ
கூறுங் கலையற் றுணர்வோய் நீ
     கூறுந் தொனியற் றுரைப்போய் நீ

மாறும் பொருள்யா விலுநின்றே
     மாறா நிலைகொள் மரபோய் நீ
யீறுந் தவிர்ந்துன் புகழ்க் கடலாழ்ந்
     தெனக்கே கரைகாட் டருளாயோ.

ஒளிநாக் கொடுவான் சுடர்புகழ
     வொளிநாக் கொடுபன் மணிபுகழக்
களிநாக் கொடுபற் புள்புகழக்
     கமழ்நாக் கொடுகா மலர்புகழத்
தெளிநாக் கொடுநீர்ப் புனல்புகழத்
     தினமே புகழப் படுவோய்நீ
அளிநாக் கொடுநா னுனைப்புகழ
     வழியா மூகை யுணர்த்தாயோ.”

கீழ்கண்ட செய்யுள்கள் “திருக்காவலூர்க் கலம்பகத்” தினின்று எடுத்தவை இக்கலம்பகம், திருக்காவலூரில் எழுந்தருளியுள்ள இயnகிறித்துவின் அன்னையராகிய மேரியம்மையார்மீது இயற்றப்பட்டது.