தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு | 161 |
அறுப்புண்டது. இக்கருத்தில் இவள் ஒருமுலை இழந்தவள் என்று கூறப்படுகிறாள். இனி, கண்ணகியாரைக் காண்போம். கண்ணகி கோவலனை மணந்து சிறிதுகாலம் இன்பவாழ்க்கை வாழ்கிறார். ஆனால், கோவலன், ஆடல் பாடல் வல்ல மாதவியின் மையலில் சிக்கிக் கண்ணகியைப் புறக்கணித்துப் பல ஆண்டுகள் (பன்னிரண்டு ஆண்டுகள்) மாதவி யுடன் வாழ்கிறாள். கற்புடைய கண்ணகி மணவாழ்க்கை இழந்து, பொறுமையுடன் இருக்கிறார். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கோவலன் மாதவியை வெறுத்துக் கண்ணகியிடம் வருகிறான். கண் இழந்த ஒருத்தி மீண்டும் கண் பெற்றது போல, கண்ணகி பெருமகிழ்ச்சி அடைகிறாள். கோவலன் மதுரைக்குப் புறப்பட அவனை விடாமல் பின் தொடர்ந்து மதுரைக்குச் செல்கிறாள். இருவரும் மதுரையின் மாதரி என்னும் மூதாட்டியின் வீட்டில் தங்குகிறார்கள். தங்கியபோது, கோவலன் தான் கண்ணகிக்கு இழைத்த சிறுமையையும் கொடுமையை யும் வெளிப்படையாகக் கண்ணகிக்குக் கூறி மனம் நொந்து, “வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப் பொச்சாப் புண்டு பொருளுரை யாளர் நச்சுக்கொன் றேற்கு நன்னெறி யுண்டோ? இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன் சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்.” என்று கூறி மனம் வருந்துகிறான். மேலும் கண்ணகியாரின் அரும் பெருங் குணங்களை வாய்விட்டுக் கூறிப் புகழ்கிறான். “குடிமுதல் சுற்றமும் குற்றிளை யோரும் அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி நாணும் மடனும் நல்லோர் ஏத்தும் பேணிய கற்பும் பெருந் துணையாக என்னொடு போந்திங் கென்துயர் களைந்த பொன்னே! கொடியே! புனைபூங் கோதாய்! நாணின் பாவாய்! நீணில விளக்கே! கற்பின் கொழுந்தே! பொற்பின் செல்வி!” என்று வாயாறப் புகழ்ந்து மனமாறக் கூறி மெய்யாறத் தழுவிக் கொள்கிறான். அப்போது இருபத்துநான்கு வயதுள்ள இளமங்கை . |